குரு மங்கள யோகம் பெறும் 5 ராசிகள் செப்டம்பர் 18 முதல்

 

செப்டம்பர் 18 முதல், குரு மற்றும் செவ்வாய் கிரகங்கள் கடக ராசியில் சேர்ந்து சஞ்சாரம் பெய்ய உள்ளதால் குரு மங்கல யோகம் உருவாகிறது. அதிலும் குறிப்பாக கடகத்தில் குரு பகவான் உச்சம் பெற்று இருக்கிறார். அவருடன் அங்காரகன் எனும் செவ்வாய் சேர்ந்து சஞ்சாரம் செய்ய உள்ளார். இந்த இரு கிரகங்களின் சேர்க்கை, யோகங்களலல் சில ராசிகளுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலைத் திறன் சிறப்பாகவும், திட்டங்களை முடிக்கவும். முடிவெடிக்கும் திறன் மேம்படுதல் என சில ராசிகளுக்கு நன்மைகள் அதிகம் கிடைக்கும்.

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரக சேர்க்கைகளுக்கும் ஒரு தனி சிறப்பு, யோகங்களும் உருவாகும். இதன் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கக்கூடியதாக இருக்கும். அந்த விதத்தில் சுப கிரகமான குருவும், அசுப கிரகங்களில் ஒன்றான செவ்வாய் சேர்ந்து சஞ்சுரிக்கும் போது அதனுடைய தாக்கம் மற்றும் இந்த கிரகங்கள் இருக்கும் இடத்தை பொறுத்து பல்வேறு ராசிகளின் தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றமும், நிதிநிலை தொடர்பான முன்னேற்றம், லாபகரமான வாய்ப்புகள் போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும். எந்தெந்த ராசிகள் அதிகம் நம்மை அடைவார்கள் என தெரிந்து கொள்வோம்.

மேஷ ராசி
மேஷ ராசி அதிபதியான செவ்வாய் பகவான் குருவுடன் சேர்ந்து உருவாகும் யோகத்தால் நீங்கள் பலவிதத்தில் நன்மை அடைய வேண்டும். அடையுங்கள் உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் உங்களுடைய ஆர்வமும் ஆற்றலும் அதிகரிக்கும். மேலும் நீங்கள் செய்யக்கூடிய தொழில் முன்னேற்றத்திற்கான பாதையை நோக்கி செல்லும். சில புதிய பொறுப்புகளை சமாளிக்க வேண்டியது இருக்கும்.
வேலை மற்றும் தொழில் தொடர்பாக இருக்கக்கூடிய போட்டிகளில் இருந்த மன அழுத்தம் நீங்கும். அதே சமயம் நீங்கள் உணர்ச்சி வசப்படுவதும் அவசரப்பட்டு முடிவுகள் எடுப்பதையும் தவிர்க்கவும்.

ரிஷப ராசி
ரிஷப ராசி அன்பர்களுக்கு உங்களுடைய தைரிய ஸ்தானத்தில் உருவாகும் குரு மங்கள யோகம், உங்களுடைய குடும்ப வாழ்க்கையிலும் பணியிடத்திலும் இருக்கக்கூடிய சூழ்நிலை சமாளிக்கக்கூடிய மன தைரியம் கிடைக்கும். மேலும் உங்கள் வேலை எழுத தொழில் தொடர்பாக புதிய வாய்ப்புகளை கொண்டு வரும். பணியிடத்தில் உங்கள் செயல் திறன் நிரூபிக்க முடியும். முக்கிய பணிகளை சரியாக திட்டமிட்டால் பெரிய வெற்றியை எதிர்பார்க்கலாம். தொழில் முனைவோருக்கு ஏற்ற காலமாக இருக்கும். வணிகம் தொடர்பாக லாபகரமான ஒப்பந்தங்களை பெறுவீர்கள்.வணிக விரிவாக்க திட்டம், பெரிய முதலீடு செய்யும் முன் சரியான ஆலோசனை பெற்று ஈடுபடவும்.

சிம்ம ராசி
சிம்ம ராசி நண்பர்களுக்கு குரு மற்றும் செவ்வாயின் சேர்க்கை காரணமாக உங்களுடைய தொழிலில் புதிய வாய்ப்புகள் திறப்பதை காண்பீர்கள். நீண்ட நாட்களாக நீங்கள் செய்யக்கூடிய வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற நல்ல விஷயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்களுடைய தலைமை பண்பு வெளிப்படும். மேலும் உங்களுக்கு சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வாய்ப்புகள் உண்டு. நீண்ட காலமாக தடைப்பட்டு இருந்த பணிகளை முடிக்கும் முயற்சி எடுத்தாலும் அதில் வெற்றி கிடைக்கும்.
இந்த காலத்திலும் புதிய நபர்களை சந்திப்பதும், அவர்களின் மூலம் கிடைக்கும் சில நல்ல ஆலோசனை உங்கள் சூழல் மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்தும்.

 

மகர ராசி
மகர ராசி சேர்ந்த நண்பர்களுக்கு சம சப்தம ஸ்தானத்தில் குரு மற்றும் செவ்வாயின் சஞ்சாரம் மூலம் உருவாகும் குரு மங்கல யோகம் பலவிதத்தில் நன்மைகளை தரக்கூடியதாக அமையும். உங்களுடைய தொழில் மற்றும் வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். அதன் மூலம் உங்களுடைய நிதி நிலைமை முன்னேற்றம் அடையும். நீங்கள் ஆற்றளுடன் உணர்வீர்கள். பணியிடத்தில் உங்கள் மேல் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க முடியும். உங்கள் திறமையை நிரூபிக்கக் கூடிய நல்ல வாய்ப்புகளையும் பெறுவீர்கள். புதிதாக சொத்து வாங்குவது அல்லது முதலீடு செய்வது தொடர்பாக ஆலோசனை பெற்ற செயல்பட்டால் எதிர்காலத்தில் நல்ல லாபத்தை பெறலாம்.

 

கும்ப ராசி
கும்ப ராசி சேர்ந்த நண்பர்களுக்கு இந்த குருமங்கள யோகம் காரணமாக உங்களுடைய தொழில் மற்றும் நிதிநிலை தொடர்பாக சாதகமான மாற்றங்களை காண்பார்கள். உங்களுடைய எதிரிகளின் தொல்லை குறையும். கல்யாணமான உழைப்பிற்கான வெகுமதி கிடைக்க வாய்ப்பு உண்டு. புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு உங்கள் அனுபவங்களை கொடுக்கும். சொந்த தொழில் தொடர்பான திட்டமிடல் மற்றும் யோசனைகளை செயல்படுத்த வாய்ப்பு கிடைக்கும். பணத்தை முதலீடு செய்வது தொடர்பாக அவசரப்பட வேண்டாம். அது தொடர்பாக ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது.
மேலும் உங்களுடைய நல்ல முடிவுகள் மற்றும் கடினமான உழைப்பிற்கான அற்புத பலன்களை பெறுவீர்கள்