இந்தியாவுக்கு வங்கதேச அதிபர் அழைப்பு பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு

 

வங்கதேசத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் மிர்சா பக்ருல் இஸ்லாம் ஆலம் கிரையை முதல் முறையாக இந்திய தூதர் தினேஷ் திரிவேதி மரியாதை நிமித்தமாக நேற்று சந்தித்தார். அப்போது அதிபருக்கு அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டதோடு, வங்கதேச மக்களுக்கான அவரது தொடர் சேவையில் வெற்றி பெறவும் வாழ்த்தினார்.இரு நாட்டு மக்களின் பரஸ்பர நலனுக்காக இருதரப்பு கூட்டாண்மையை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தியதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.தெற்காசிய உடைகளைத் தேர்ந்தெடு

இந்த சந்திப்பின்போது அதிபர் மிர்சா, வங்கதேசத்தின் மிக நெருங்கிய அண்டை நாடு, முக்கிய வர்த்தக மற்றும் வளர்ச்சிக் கூட்டாளியாக உள்ள இந்தியாவுடனான உறவுகளுக்கு வங்கதேசம் சிறப்பு முக்கியத்துவம் அளிப்பதாக தெரிவித்தார். இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் இந்தியாவுடனான நிலுவையில் உள்ள பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் விரைவாக தீர்க்குமாறும் அதிபர் அழைப்பு விடுத்தார். வர்த்தகம், நீர் வள மேலாண்மை, தொழில்நுட்பம், இணைப்பு வசதிகள், கலாச்சாரம் மற்றும் மக்களிடையேயான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கு பெரும் வாய்ப்புகள் உள்ளதாகவும் வங்கதேச அதிபர் தெரிவித்துள்ளார்.