மீது சவுதி அரேபியா நடத்​திய தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பதிலடி

 

ஏமன் தலைநகர் சனா உட்பட பல்​வேறு பகு​தி​களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்​களது கட்​டுப்​பாட்​டில் வைத்துள்ளனர். இந்​நிலை​யில் ஏமனின் ஜவுஃப் மாகாணத்​தில் உள்ள அல் ஹசாம் நகர மத்​திய சிறைச்​சாலை​யின் மீது சவுதி அரேபியா நடத்​திய விமான தாக்​குதலில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் கொல்​லப்​பட்​ட​தா​வும், ஒரு பெண் உட்பட 7 பேர் காயமடைந்த​தாக​வும் ஹவுதி சுகா​தார அமைச்சக செய்​தித் தொடர்​பாளர் அனீஸ் அல் அஸ்​பஹி தெரி​வித்​திருந்​தார்.

இதனிடையே ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்​சி​யாளர்​கள் தங்​கள் நாட்​டின் மீது நடத்​திய தாக்​குதலில் பெண்​கள், குழந்​தைகள் உட்பட பொது​மக்​கள் 73 பேர் காயமடைந்​துள்​ள​தாக சவுதி அரேபியா தெரி​வித்​துள்​ளது.

ஏமன் எல்​லையை ஒட்​டி​யுள்ள சவுதி அரேபி​யா​வின் தெற்​குப் பகு​தி​களில் உள்ள பொது​மக்​கள் வசிக்​கும் இடங்​கள் மற்​றும் எரிசக்தி நிலை​யங்​கள் மீது ஹவுதி கிளர்ச்​சி​யாளர்​கள் ஏவு​கணைத் தாக்​குதல் நடத்​தி​ய​தாக சவுதி தரப்பு தெரி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக சவுதி எரிசக்தி அமைச்​சகம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், ‘‘செப். 8-ம் தேதி அதி​காலை​யில் தெற்​குப் பகுதிகளில் உள்ள பல எரிசக்​தித் தளங்​கள் தாக்​கப்​பட்​ட​தில் குடிமக்​கள் காயமடைந்​தனர்.

சவுதி அரேபி​யா​வின் அபா சர்வதேச விமான​நிலை​யம், கிங் காலி விமான தளம், அபா மற்றும் ஜஸானில் உள்ள அராம்கோ நிறு​வனத்​தின் கட்​டிடங்​கள் ஆகிய​வற்​றின் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​டுள்​ளது. மொத்​தம் 73 பேர் காயமடைந்​துள்​ளனர்’’ என கூறப்​பட்​டுஉள்​ளது.