ஈரானுக்கு உதவி செய்த மகான் எயர் விமான நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

 

ஈரானைச் சோ்ந்த மகான் எயர் விமான நிறுவனம், போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் தனது விமானங்களில் அந்த நாட்டின் புரட்சிகர பாதுகாப்புப் படைக்கு வீரர்களை ஏற்றிச் செல்லுதல், ஆயுதங்களைக் கொண்டு செல்லுதல் உள்ளிட்ட உதவிகளைச் செய்வதாக அமெரிக்கா

குற்றஞ்சாட்டியுள்ளது. ஈரானை தனிமைப்படுத்தும் நடவடிக்கையாக ஈரானின் விமான போக்குவரத்து துறையின் பல பகுதிகள் மீது ஏற்கனவே அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. இந்த நிலையில், ஈரான் விமான நிறுவனத்துக்கு உதவி செய்ததாக கூறப்படும் 24 தனியார் விமான நிறுவனங்கள், கார்கோ விமான நிறுவனங்கள் மீது அமெரிக்கா புதிய தடைகளை விதித்துள்ளது.