ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க கப்பலை தாக்கியதாக ஈரான் அறிவிப்பு

 

ஹார்முஸ் ஜலசந்தியில் நுழைய முயற்சி செய்த அமெரிக்க கப்பலை தாக்கியதாக ஈரான் அறிவித்துள்ளது மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு மாதம் அமைதி நீடித்த நிலையில், அமெரிக்காவும், ஈரானும் கடந்த வாரம் மீண்டும் தாக்குதல்களை தொடங்கின. ஈரானின் பல பகுதிகளை குறி வைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில் 19 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்க கடற்படை கப்பல் மீதான ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக 3 ஈரான் எண்ணெய் கப்பல்கள் மீது ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா நேற்று முன்தினம் தெரிவித்தது. இந்த நிலையில்,ஹார்முஸ் ஜலசந்தியில் நுழைய முயன்ற அமெரிக்க கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் நேற்று தெரிவித்தது. மோதல் தீவிரமடைந்துள்ளதால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.