முன்னாள் கணவரின் துரோகத்தால் விவாகரத்து பெற்ற ஹாலிவுட் நடிகை நடாலி போர்ட்மேன் தற்போது புதிய காதலருடன் தனது 3வது குழந்தையை ஈன்றெடுத்துள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகையான நடாலி போர்ட்மேன் (45), கடந்த 11 ஆண்டுகளாக நடன இயக்குனர் பெஞ்சமின் மில்லிபீட் என்பவரை காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு அலேப் என்ற மகனும், அமாலியா என்ற மகளும் உள்ளனர்.
இதற்கிடையே, பெஞ்சமின் மில்லிபீட் சுற்றுச்சூழல் ஆர்வலரான கேமில் எட்டியென் என்ற இளம் பெண்ணுடன் ரகசிய தொடர்பில் ஈடுபட்டது வெளிச்சத்திற்கு வந்தது. இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியாவதற்கு ஒரு நாளுக்கு முன்பே, நடாலி போர்ட்மேன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘‘துயரத்தில் இருக்கும் மனைவி தன் கணவரின் வாழ்க்கையின் உண்மையை தேடுகிறார்’ என்ற வரிகளை குறிப்பிட்டிருந்தார்.
இதன்மூலம் கணவரின் கள்ளத்தொடர்பு விவகாரம் முன்கூட்டியே அவருக்கு தெரிந்துவிட்டதாக ரசிகர்கள் கூறினர். இதைத்தொடர்ந்து ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.இந்த கசப்பான பிரிவுக்குப் பிறகு, டங்குய் டெஸ்டபிள் என்பவருடன் நடாலி போர்ட்மேன் புதிய ‘லிவ்இன்’ வாழ்க்கையை தொடங்கினார்.
இந்நிலையில் பாரிஸ் நகரில் கடந்த மாதத்தில் குழந்தை பிறந்துள்ளது. நடாலிக்கு இது 3வது குழந்தையாகும். இதுகுறித்து நடாலி போர்ட்மேன் கூறும்போது, ‘எனது குடும்பம் மீண்டும் விரிவடைவது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் மற்றும் மகிழ்ச்சியான தருணம் ஆகும். இதற்கு நான் ஆழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறினார்.



