கும்மிடிப்பூண்டியில் புதிய விமானநிலையம் சென்னையில் இருந்து 120 கி.மீ. தூரத்தில்

 

; ஆந்திரா, புதுச்சேரி அருகே இடங்களை தேர்வு செய்தது தவெக அரசு: ஆய்வு செய்ய விமான ஆணையத்துக்கு பரிந்துரை
சென்னையின் 2வது விமான நிலையம் அமைக்க செய்யூர், கும்மிடிப்பூண்டி ஆகிய 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த இடங்களில் முதற்கட்ட சாத்தியக்கூறு ஆய்வு நடத்தக் கோரியும் இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு தவெக அரசு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையின் 2வது விமான நிலையம் பரந்தூரில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். கடந்த 2025ம் ஆண்டு அப்போராட்டத்தில் பங்கேற்றவர்களை சந்தித்து தவெக தலைவரான விஜய் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பரந்தூரில் அமையவிருந்த விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்தார். அத்துடன் மாநில பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் புதிய இடம் தேர்வு செய்யப்பட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து, மாற்று இடங்களை தவெக தலைமையிலான அரசு தேர்வு செய்ய முடிவு செய்து அதற்கான பணிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகமான டிட்கோவின் குழு ஏற்கனவே செய்யூர் மற்றும் கும்மிடிப்பூண்டி அருகே மாநெல்லூர் பகுதிகளில் முதல்கட்ட ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் தொடர்ச்சியாக, இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் இரண்டு இடங்களையும் நேரில் பார்வையிட்டு விரிவான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். அந்த ஆய்வறிக்கையில் வழங்கப்படும் பரிந்துரைகளின் அடிப்படையில் இறுதி இடம் தேர்வு செய்யப்பட உள்ளது.

அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செய்யூர் பகுதி புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவிலும், கல்பாக்கத்திலிருந்து சுமார் 35 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. தற்போதைய சென்னை விமான நிலையமான மீனம்பாக்கத்திலிருந்து சுமார் 120 கி.மீ. தொலைவில் இந்த பகுதி உள்ளது. மற்றொரு இடமான மாநெல்லூர், கும்மிடிப்பூண்டிக்கு அருகிலும் ஆந்திர மாநில எல்லையை ஒட்டிய பகுதியிலும் அமைந்துள்ளது. இது சென்னையிலிருந்து சுமார் 50 கி.மீ. தொலைவிலும், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சுமார் 35 கி.மீ. தொலைவிலும் உள்ளது.பயண வழிகாட்டிகளைப் படி

ஆந்திர மாநிலம் முன்மொழிந்துள்ள குப்பம் விமான நிலையத்திலிருந்து சுமார் 200 கி.மீ. தொலைவில் இந்த பகுதி அமைந்துள்ளது. இரண்டு இடங்களும் விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டிருந்தாலும், இறுதி முடிவுக்கு முன்பு பல்வேறு ஒழுங்குமுறை அமைப்புகளிடம் இருந்து அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளது.

குறிப்பாக, செய்யூர் பகுதியின் வான்வெளி தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதி உள்ளிட்ட கூடுதல் ஒப்புதல்கள் பெறப்பட வேண்டும்.

ஏற்கனவே, செய்யூர் பகுதியில் விமானநிலையம் அமைப்பதற்கு விமான நிலைய ஆணையம் ஒப்புதல் தரவில்லை என்பது குறிப்பித்தக்கது. அதேபோல் மாநெல்லூர் பகுதி ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்துக்கு மிக அருகில் இருப்பதால், வான்வழி தொடர்பான சில சவால்களும் இருக்கிறது. இந்திய விமான நிலைய ஆணையத்தின் அதிகாரிகள் குழு இரண்டு இடங்களையும் நேரில் ஆய்வு செய்த பின்னர் விரிவான அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. அந்த அறிக்கை சில மாதங்களில் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மாநெல்லூர் பகுதி இறுதி செய்யப்பட்டால், திருவள்ளூர் மாவட்டத்தின் தொழில் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு உதவும் என அரசு கூறுகிறது. இதனால் சென்னை மற்றும் ஆந்திர எல்லைப் பகுதிகளை இணைக்கும் சாலை மற்றும் ரயில் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கிறது. ஆனால் அதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு என்கின்றனர்.வரலாற்று இடங்களை பார்வையிடுக

வடசென்னை, திருவள்ளூர் மற்றும் ஆந்திராவின் பல பகுதிகளை சேரந்தவர்கள் விமான பயணத்துக்காக மீனம்பாக்கம் செல்ல வேண்டிய தூரமும் குறையும். அதே நேரத்தில் சென்னையின் மற்ற பகுதியில் உள்ளவர்கள் இந்த விமானநிலையத்தை அடைய அதிக சிரமப்பட வேண்டியிருக்கும். புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டால், நிலங்களின் மதிப்பு உயர்வதன் மூலம் ரியல் எஸ்டேட் துறையும் வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், இவை அனைத்தும் தற்போதைய நிலையில் எதிர்பார்ப்புகளாக மட்டுமே உள்ளன. இந்திய விமான நிலைய ஆணையத்தின் விரிவான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை, பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அனுமதிகள், இடத்தேர்வு ஆகியவற்றுக்கு பின்னரே திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தெளிவாகும்.

* சென்னையின் 2வது விமான நிலையம் பரந்தூரில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

* பரந்தூரில் அமைய இருந்த விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்தார்.தமிழ்நாடு செய்திகள்

* மாநில பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் புதிய இடம் தேர்வு செய்யப்பட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்றும் விஜய் தெரிவித்தார்.