நேபாளல் வெள்ளம் 8,186 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தகவல்சீன அதிபர் ஜி ஜின்பிங் அவசர ஆலோசனை 

நேபாளத்தின் கோஷி ஆற்றில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் உயிரிழ*தோர் எண்ணிக்கை 734ஆக அதிகரித்துள்ளது. நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கியவர்களில் 108 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். நேபாள பெரு வெள்ளம் ஏற்பட்ட நாள் முதல் தற்போது வரை 275 இந்தியர்களை காணவில்லை என வெளியுறவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது. நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கி இதுவரை 8,186 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

திபெத் – நேபாள எல்​லைப் பகுதி​யில் ஏற்​பட்ட திடீர் வெள்​ளப்​பெருக்​கில் நூற்​றுக்​கணக்​கானோர் உயி​ரிழந்​தும், ஏராளமானோர் மாய​மாகி​யும் உள்ள நிலை​யில், நிலை​மையை ஆய்வு செய்​வதற்​காகச் சீன அதிபர் ஜி ஜின்பிங் தலை​மை​யில் ஆளும் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் அவசர ஆலோ​சனைக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது.

இதுகுறித்து சீன அரசு செய்தி நிறு​வன​மான ஜின்​ஹூவா தெரிவித்​துள்​ள​தாவது: திபெத் தன்​னாட்​சிப் பிராந்​தி​யத்​தில் உள்ள ஜிராங் மாவட்​டத்​தில் கடந்த புதன்​கிழமை ஏற்​பட்ட இயற்கை பேரிடர் காரண​மாக நேபாளத்​தில் கடுமை​யான வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டது. இந்த வெள்​ளப்​பெருக்​கில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்​சலி செலுத்​தும் வகை​யில் அதிபர் ஜி ஜின்​பிங் உள்ளிட்ட முக்​கி​யத் தலை​வர்​கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்​தினர்.

கூட்​டத்​தில் எடுக்​கப்​பட்ட முடிவு​களின்​படி, காணா​மல் போன சீனர்​கள் மற்​றும் வெளி​நாட்​டினரைத் தேடிக் கண்​டு​பிடிக்​கும் பணி​களை அறி​வியல் பூர்​வ​மான திட்​ட​மிடலுடன் முடுக்​கி​விட முடிவு செய்​யப்​பட்​டது. இவ்​வாறு ஜின்​ஹுவா தெரி​வித்​துள்​ளது. நேபாளத்​தில் ஏற்​பட்ட வெள்​ளப்​பெருக்​கில் உயி​ரிழந்​தவர்​களின் எண்​ணிக்கை 500-ஐ தாண்​டி​யுள்​ளது.

திபெத்​தில் 3 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். மேலும் திபெத்​தில் 550-க்​கும் மேற்​பட்​டோரும், நேபாளத்​தில் 100 சீனர்​களும் மாயமாகியுள்ளனர். பாதிக்​கப்​பட்ட பகு​தி​களி​லிருந்து 555 சுற்றுலாப் பயணி​கள் உட்பட சுமார் 1,000 பேர் பாது​காப்​பான இடங்​களுக்கு வெளி​யேற்​றப்​பட்​டுள்​ள​தாக சீன அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். எனினும், மீட்​கப்​பட்ட சுற்​றுலாப் பயணி​களின் சொந்த நாட்​டின் விவரங்​கள் முழு​மை​யாக வெளியிடப்படவில்லை.

நேபாள வெள்ளத்தில் இதுவரை 579 பேர் உயிரிழந்துள்ளனர். 2,381 பேரைக் காணவில்லை.

பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க நிவாரணப் பொருட்களுடன் 3-வது விமானம் நேற்று காத்மாண்டு சென்றது.

நேபாளத்தில் அமைந்துள்ள இமயமலையின் துணைத் தொடரான லாங்டாங் ஹிமாலின் மிக உயரமான பனிச்சிகரம் லாங்டாங் லிருங். அங்குள்ள பனிப்பாறைகள் உருகி பனிச் சிகரத்துக்குள் மிகப்பெரிய ஏரி உருவாகி இருந்தது.

கடந்த 26-ம் தேதி லாங்டாங் லிருங் பனிச்சிகரத்தில் சுமார் 1.5 கி.மீ. அகலம் கொண்ட பனிமலை உடைந்து ஏரியில் விழுந்தது. இதனால் ஏரி உடைந்து சீனாவின் திபெத் பகுதி மற்றும் நேபாளத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்டது. திபெத் பகுதியில் 5 பேர் உயிரிழந்தனர். 558 பேரைக் காணவில்லை. இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவர்.

நேபாளத்தில் போடேகோசி, திரிசூலி நதிகளில் பல மீட்டர் உயரத்துக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் ரசுவா, தாதிங், நுவாகோட் ஆகிய 3 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ள பாதிப்பால் நேபாளத்தில் இதுவரை 579 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு உள்ளன. 644 வெளிநாட்டினர் உட்பட 2,381 பேரைக் காணவில்லை.

இந்நிலையில், சீனா – நேபாள எல்லையில் சோச்சென் கோலா, புரேபு சாங்போ நதிகள் சங்கமிக்கும் இடத்தில் பனிப்பாறைகள் உருகி மிகப்பெரிய ஏரி உருவாகி இருந்தது. இந்த ஏரி நேற்று உடைந்து திபெத், நேபாள நதிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இரண்டாவது ஏரி உடைந்து நேபாள நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 5 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நதிகளின் கரையோரம் வசித் தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டதால் இந்த முறை உயிரிழப்பு தடுக்கப்பட்டு உள்ளது.

நேபாளத்தின் திரிசூலி நதியில் புதிதாக நீர்மின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்தப் பணியில் 350-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். கடந்த 26-ம் தேதி பெருவெள்ளத்தின் போது நீர் மின் நிலைய கட்டுமானங்கள் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்துக்குப் பிறகு 250 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

எனினும், சுரங்கத்தில் சுமார் 100 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். அங்கு மீட்புப்பணி மேற் கொள்ள இந்தியாவின் உதவியை நேபாள அரசு நாடி உள்ளது.

நேபாள அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெள்ளம் பாதித்த பகுதிகளில் போலீஸ், ராணுவம், ஆயுதப் படை, தேசிய பேரிடர்மீட்புப் படையைச் சேர்ந்த 13,295 வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். 15 ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. இதுவரை 3,742 பேரை உயிருடன் மீட்டுள்ளோம். காயம் அடைந்தவர்கள் காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு நேபாள அரசு தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் டெல்லியில் நேற்று கூறுகையில், ‘‘சீன எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சிக்கிய 400 இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர். அவர்கள் நேபாளம் வழியாக இந்தியாவுக்கு திரும்ப உள்ளனர். நேபாளத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முகாமிட்டிருந்த 320 இந்தியர்களைக் காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்கிறது’’ என்றார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு உதவ கடந்த 26-ம் தேதி 10 டன் நிவாரணப் பொருட்களுடன் இந்திய விமானப் படை விமானம் காத்மாண்டுவுக்குச் சென்றது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் 37.5 டன் நிவாரணப் பொருட்களுடன் 2-வது ராணுவ விமானம் காத்மாண்டு சென்றடைந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று மாலை மருந்துகள், உணவுப் பொருட்கள், கூடாரங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட் களுடன் 3-வது இந்திய ராணுவ விமானம் காத்மாண்டுவுக்குச் சென்றது.

தமிழர்களை வரவேற்ற ஜெய்சங்கர்
நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய 21 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு விமானம் மூலம் நேற்று டெல்லி திரும்பினர். டெல்லி விமான நிலையத்தில் அவர்களை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார். அப்போது மத்திய அமைச்சருக்கு 21 பேரும் நன்றி தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெய்சங்கர் கூறும்போது, ‘‘நேபாளத்தில் சுமார் 320 இந்தியர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. 85 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். முதல் கட்டமாகத் தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் டெல்லி திரும்பி உள்ளனர். இதற்காக நேபாள ராணுவத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

நேபாளத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கி வருகிறது. அங்குத் தற்காலிக பாலங்களை அமைக்க இந்தியாவின் உதவியை நேபாளம் கோரி உள்ளது. இதற்காக இந்திய வல்லுநர்கள் நேபாளத்துக்கு அனுப்பப்பட உள்ளனர். மருத்துவக் குழுவினரும் நேபாளத்துக்குச் செல்வார்கள்.

இவ்வாறு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.