உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது. 4 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் இந்தப் போரினால் உக்ரைனின் கீவ் உள்ளிட்ட பல முக்கிய நகரங்கள் தொடர் தாக்குதல்களை சந்தித்து வருகின்றன. இரண்டு நாடுகளுக்கும் இடையே போரை நிறுத்தும் நோக்கில் அதிபர் டிரம்பின் தூதர்களான விட்காப், குஷ்னர் ஆகியோர் மாஸ்கோவுக்கு சென்று அதிபர் புடினை சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தையில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை.
ஆனால் பேச்சுவார்த்தை மிகவும் வெளிப்படையாக இருந்தது என்று ரஷ்யா தெரிவித்திருந்தது. இதையொட்டி அதிபர் புடின் தற்காலிக சண்டை நிறுத்தத்தை அறிவித்தார். இந்த நிலையில்,டிரம்பின் சிறப்பு தூதர்கள் உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு நேற்று வந்தனர். அவர்கள் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் அமைதி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர்.
உக்ரைன் போரை முடிக்க, ரஷ்ய அதிபர் புதினுடன் மாஸ்கோவில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் சிறப்பு தூதர்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாகவும் வெளிப்படையாகவும் இருந்ததாக ரஷ்யாவின் க்ரெம்லின் மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதர்கள் இன்று உக்ரைனுக்கு சென்று அதிபர் ஜெலன்ஸ்கியுடன் ஆலோசிக்க உள்ளனர்.



