பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பலுசிஸ்தான் மாகாணத்தின் கலாட் மாவட்டத்தில் உள்ள பாக் என்ற நகரை கைப்பற்றுவதற்காக ஆயுதம் ஏந்திய பலூச் கிளர்ச்சி குழுக்களை சேர்ந்த கும்பல் முயற்சிப்பதாக உளவுத்துறை தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் காவல்துறை மற்றும் துணை ராணுவப்படையினர் தீவிரவாதிகளின் பதுங்குமிடத்தை கண்டறிந்து, கண்காணித்து துல்லியமான தாக்குதலை நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 12 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அங்கு கைப்பற்றப்பட்ட கையால் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகள் அங்கேயே அழிக்கப்பட்டன.
இதனிடையே பாக் நகரில் உள்ள காவல்நிலையம், உதவி ஆணையர் அலுவலகம், வங்கி ஆகியவற்றின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் நடத்தியுள்ளனர். 40 தீவிரவாதிகள் கனரக ஆயுதங்கள், ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் இயந்திரத்துப்பாக்கிகள், கையெறி குண்டுகளை பயன்படுத்தி மூன்று இடங்களிலும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் இரண்டு காவலர்கள் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.



