சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட சடலம் குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்

இந்த பழக்கம் நெருக்கமாக மாறிய நிலையில், நிஷா கர்ப்பமாகியுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் நிஷா தன்னை திருமணம் செய்துக்கொள்ள மொனிருதின் லஸ்கரை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாக கூறிய அவர், கர்ப்பத்தை கலைக்குமாறு நிஷாவிடம் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அவரை விட்டு விலகி வந்துள்ளார்.

அதன்பிறகு,மொனிருதின் லஸ்கரை ,நிஷா சண்டையிட்டு வந்துள்ளார். ஒருக்கட்டத்தில் ஆத்திரமடைந்த மொனிருதின் லஸ்கர் தனது மனைவி பகவதி மாஜியுடன் நிஷாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு நிஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தையின் ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவரும் சேர்ந்து நிஷாவை தாக்கி கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும்,நிஷாவின் கொலையை மறைப்பதற்காக,யூடியூப் வீடியோக்களைப் பார்த்துக், உடலை வெட்டி சமைத்ததாக பரபரப்பு வாக்கு மூலத்தை கொடுத்துள்ளனர்.

ஆக்ரா ரயில் நிலையத்தில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த சிவப்பு நிற சூட்கேஸில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி மாணிக் உதின் லஷ்கர் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் யார், கொலைக்கான காரணம் என்ன, இந்தச் சம்பவத்தில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா ரயில் நிலையத்தில் கிடந்த சிவப்பு நிற சூட்கேஸில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேச ரயில்வே போலீசார் இணைந்து நடத்திய விசாரணையில், சென்னையில் இருந்து தொடங்கிய துப்பு தற்போது மணிப்பூர் வரை சென்றுள்ளது.

சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட சடலம்
கடந்த 5ஆம் தேதி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் ஆக்ரா சென்றடைந்தபோது, ரயில் நிலையத்தில் கேட்பாரற்ற நிலையில் சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்று கிடந்தது. அதனை போலீசார் சோதனை செய்தபோது, அதற்குள் சிதைந்த நிலையில் மனித உடல் பாகங்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து உத்தரப் பிரதேச ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். தமிழ்நாடு ரயில்வே போலீசாருடனும் இணைந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

சென்னையில் இருந்து கிடைத்த துப்பு
விசாரணையின் ஒரு பகுதியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் செங்கல்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், ஒரு ஆணும் பெண்ணும் சிவப்பு நிற சூட்கேஸுடன்சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குள் வந்ததும், அந்த சூட்கேஸை ரயில் பெட்டிக்குள் வைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறியதும் பதிவாகியிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்த இருவரும் செங்கல்பட்டு மசூதி தெருவைச் சேர்ந்த உதின் லஷ்கர் மற்றும் மஞ்சி என அடையாளம் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

வீட்டில் கிடைத்ததாக கூறப்படும் அதிர்ச்சி தடயங்கள்
இதையடுத்து உதின் லஷ்கர் மற்றும் மஞ்சி தங்கியிருந்த வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது மனித உடலை வெட்டி, எலும்புகள் மற்றும் சதைப் பகுதிகளை தனித்தனியாக வைத்திருந்ததற்கான தடயங்கள் இருந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மனித உடல் பாகங்களை ஒரு பாத்திரத்தில் சமைத்ததற்கான தடயங்களும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த தடயங்கள் வழக்கின் விசாரணையில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

மணிப்பூரில் பதுங்கியிருந்த உதின் கைது
கொலைச் சம்பவத்துக்குப் பிறகு குற்றவாளிகளை தேடும் பணியில் கூடுவாஞ்சேரி போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த நிலையில், உதின் லஷ்கர் மணிப்பூரில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மணிப்பூருக்குச் சென்ற போலீசார், அங்கு வைத்து உதின் லஷ்கரை கைது செய்துள்ளனர்.

திருமணத்தை மீறிய உறவு காரணமா?
இந்தக் கொலை சம்பவம் திருமணத்தை மீறிய உறவு காரணமாக நடைபெற்றிருக்கலாம் என முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், கொலைக்கான முழுமையான காரணம் குறித்து போலீசார்தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் உதின் லஷ்கருடன் கூட்டாளியாக செயல்பட்டதாகக் கூறப்படும் மஞ்சியும் கைது செய்யப்பட்டால்தான், கொலை எப்படி நடைபெற்றது, அதற்கான காரணம் என்ன, இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது உள்ளிட்ட முழுமையான தகவல்கள் வெளியாகும் என போலீசார் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, உயிரிழந்தவர் யார் என்பது, கொலை நடைபெற்ற இடம், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட முறைகள் உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.