இலங்கை இசைத்துறையின் பிரபல பாடகர் பிரியங்கர பெரேரா காலமானார்!

 

இலங்கை இசைத்துறையின் மூத்த மற்றும் பிரபல பாடகரான பிரியங்கர பெரேரா காலமானார் என அவரது குடும்ப வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.தீவுகளை சுற்றிப்பார்த்தல்

திடீர் உடல்நலக்குறைவினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்று (01) செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.

நாட்டின் முன்னணிப் பாடகர்களில் ஒருவரான பிரியங்கர பெரேரா, பல தலைமுறைகளைக் கடந்து இரசிகர்களின் மனங்களைக் கவர்ந்த பல காலத்தால் அழியாத பாடல்களைப் பாடியுள்ளார்.

“மின்னலுவா”, “சுது ரோச மலக்”, “பெமி சுவத பெறா” உள்ளிட்ட எண்ணற்ற பிரபல சிங்களப் பாடல்கள் மூலம் இரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம்பெற்றவர்.

சிங்கள இசைத்துறையின் ஜாம்பவானாகத் திகழ்ந்த மறைந்த பாடகர் ஜே.ஏ. மில்டன் பெரேராவின் மகனான இவர், தனது தந்தையின் இசை பாரம்பரியத்தைச் சிறப்பான முறையில் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றார்.பயண வழிகாட்டி வாசித்தல்

அவரது மறைவுக்கு இசைப் பிரபலங்கள், கலைத்துறையினர் மற்றும் ஆயிரக்கணக்கான இரசிகர்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். இறுதிக்கிரியை குறித்த தகவல்கள் குடும்பத்தினரால் பின்னர் அறிவிக்கப்படும்.