7 மாதத்துக்கு பின் காதலன் டொராண்டோவில் கைது- இந்​திய வம்​சாவளிப் பெண்​ கொலை

 

கனடாவில் இந்​திய வம்​சாவளிப் பெண்​ணைக் கொலை செய்​து​விட்டு 7 மாதங்​களாகத் தலைமறை​வாக இருந்த அவரது காதலனை, சர்​வ​தேச காவல் அமைப்​பு​களின் உதவி​யுடன் டொராண்டோ காவல் துறை​யினர் விமான நிலை​யத்​தில் கைது செய்​தனர்.

கனடா​வின் டொராண்​டோ​வில் வசித்து வந்த 30 வயதான இமான்ஷி குரானா என்ற இந்​தி​யப் பெண், கடந்த 2025 டிசம்​பர் 19 இரவில் திடீரென மாய​மானதைத் தொடர்ந்​து, காவல் துறை அவரைத் தீவிர​மாகத் தேடத் தொடங்​கியது.மறு​நாள் காலை அப்​பகு​தி​யில் உள்ள ஒரு வீட்​டில் இமான்ஷி சடல​மாகக் கண்டெடுக்கப்​பட்டார்.

விசா​ரணை​யில் இமான்​ஷி​யின் காதல​னான அப்​துல் கபூரி (32) இக்​கொலை​யைச் செய்​தது தெரிய​வர​வே, அவர் மீது கொலை வழக்​குப் பதிவு செய்​யப்​பட்டு நாடு தழு​விய பிடி​யாணை பிறப்பிக்கப்​பட்​டது.

இச்​சம்​பவத்​துக்​குக் கடும் அதிர்ச்​சி​யும், இரங்​கலும் தெரி​வித்த டொராண்டோ இந்​தி​யத் தூதரகம், உள்​ளூர் அதி​காரி​களு​டன் இணைந்து பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​துக்​குத் தேவை​யான உதவிகளை வழங்​கியது. இந்​நிலை​யில் வெளி​நாட்​டில் ஒளிந்திருந்த அப்​துல் கபூரியை சர்​வ​தேச காவல் அமைப்​பு​களின் உதவி​யுடன் கண்​டறிந்த டொராண்டோ சிறப்​புக் காவல் படையினர், இரு தினங்​களுக்கு முன் அவர் டொராண்டோ வி​மான நிலை​யம்​ வந்​தடைந்​ததும்​ கைது செய்​தனர்​.