சேலத்தில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி கொலை பாகங்கள் தண்ணீர் தொட்டியில் –

 

.
சேலம் மாவட்டம் நான்கு ரோடு அருகே உள்ள குணபாலன் ராமசாமி தெரு பகுதியில் உள்ள் கோவிலுக்குச் சொந்தமான வீகடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பூசாரி ரமேஷ் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். தனது 34-வது திருமண நாளையொட்டி நேற்று முன்தினம் குடும்பத்துடன் தஞ்சாவூர், கும்பகோணம் சென்றிருந்த ரமேஷ், நேற்று நள்ளிரவு வீடு திரும்பியுள்ளார்.

இன்று காலை குளிப்பதற்காக தண்ணீர் குழாயை திறந்தபோது, தண்ணீரில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த ரமேஷும், அவரது மகன் கௌதமும் தண்ணீர் தொட்டியை சோதனை செய்துள்ளனர். அப்போது இரண்டு சின்டெக்ஸ் தொட்டிகளில் மூட்டைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதைப் பிரித்துப் பார்த்தபோது கை விரல்கள் தென்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பெண்ணை துண்டு துண்டாக வெட்டி கொலை
இதை தொடர்ந்து, பள்ளப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அப்போது ஒரு மூட்டையில் தலை கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையிலும், மற்றொரு மூட்டையில் மார்பு பகுதி வெட்டப்பட்ட நிலையிலும் சடலம் இருந்தது தெரியவந்தது.

மேலும் காணாமல் போன இடுப்பு பகுதியை போலீசார் தேடிய நிலையில், அருகிலிருந்த மற்றொரு வீட்டின் தண்ணீர் தொட்டிக்கு அடியில் ஒரு மூட்டை கண்டெடுக்கப்பட்டது. அதில் சடலத்தின் இடுப்பு பகுதி இருந்துள்ளது. சம்பவ இடத்திற்கு மாநகர காவல் துணை ஆணையர் அங்கித் சிங், உதவி ஆணையர் ரமலி ராமலட்சுமி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மோப்பநாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு
மேலும் மோப்பநாய் ஜூலி மற்றும் தடய அறிவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. கொலை செய்யப்பட்ட பெண்ணின் கையில் “கணபதி” என்ற பெயருடன் விநாயகர் உருவ பச்சை குத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. சடலம் அழுகிய நிலையில் இருப்பதால், கொலை நடந்து சில நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

காவல்துறை தீவிர விசாரணை
இந்த கொலையில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் சில வீடுகளில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட பெண் யார்? கொலைக்கான காரணம் என்ன? உடலை துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டிகளில் வீசியது யார்? என்பது குறித்து போலீசாரின் விசாரணை தீவிரமடைந்துள்ளது

சமீபத்தில் சென்னை கூடுவாஞ்சேரியில் பெண்னை கொலை செய்து வெட்டி பிரியாணி அண்டாவில் சமைத்த சம்பவம் அரங்கேறியது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வரும் நிலையில், சேலத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்து இருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.