அனில் மேனன் விண்வெளியில் நடைபயணம்

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கும் , ஹூஸ்டனில் உள்ள நாசாவின் கட்டுப்பாட்டு மையத்திற்கும் இடையே அதிவேகத் தகவல்தொடர்புக்கான, விண்வெளியிலிருந்து தரைக்கு செல்லும் ஆண்டெனாவில் பழுது ஏற்பட்டது. இதையடுத்து ஆண்டெனாவை மாற்றுவதற்காக விண்வெளி வீரர் அனில் மேனன், விண்வெளி வீராங்கனை சோபி அடெனெட்டும் விண்வெளியில் நடந்து ஆண்டெனாவை மாற்றுவதற்கான பணியை மேற்கொண்டனர்.

அனில் மேனன் விண்வெளி நடைபயணம் மேற்கொள்வது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே,அனில் மேனனும், விண்​வெளி வீராங்​கனை ஜெசிகா​வும் சூரிய மின் உற்​பத்தி சாதனத்​தில் மாற்​றங்​களை செய்ய விண்வெளியில், 7 மணி நேரம் நடந்துள்ளனர்.