போதை பொருள் உட்கொண்டதால் மாரடைப்பா?ஹாலிவுட் நடிகைஉயிரிழந்த சம்பவம்

பிரபல ஹாலிவுட் நடிகை ஹைடன் பனெட்டியர் திடீரென உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹாலிவுட் நடிகை ஹைடன் பனெட்டியர் (36) என்பவர் மது மற்றும் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி பல்வேறு மன உளைச்சல்களையும் பிரச்னைகளையும் சந்தித்து வந்தார். இதற்காக கடந்த 2016ம் ஆண்டு திரையுலகை விட்டு ஒதுங்கிய அவர், பின்னர் 2023ம் ஆண்டு வெளியான ‘ஸ்க்ரீம்’ படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார்.

இந்த நிலையில், தென் கரோலினாவில் உள்ள கிரீன்வில்லே பகுதியில் வசித்து வந்த அவர், நேற்று தனது வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் அவசர மருத்துவக் குழுவினர், தீவிர சிகிச்சை அளித்தும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவித்தனர். முதற்கட்ட விசாரணையில் எவ்வித சந்தேகத்திற்குரிய சம்பவங்களோ அல்லது மர்மங்களோ கண்டறியப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் வழக்கை ஆறு மாதங்களில் முடிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு’
அவசர உதவி எண்கள் மூலம் கிடைத்த ஆடியோ தகவலில் அளவுக்கு அதிகமான போதைப்பொருள் உட்கொண்டது மற்றும் மாரடைப்பு குறித்து பேசப்பட்டாலும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான காரணம் தெரியவரும். இவரது மறைவுக்கு பல முன்னணி ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.