சுவிட்சர்லாந்து மலைக்கு அடியில் பெரும் பணக்காரர்களின் தங்கம் மற்றும் ஆடம்பரப் பொருட்களைப் பாதுகாக்க, ₹5.8 கோடி ஆரம்ப விலையில் அதிநவீன பாதாளப் பெட்டகங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
மூன்றாவது உலகப்போர் வந்தாலோ அல்லது உலகமே அழியும் அளவுக்குப் பெரும் இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டாலோ தங்களது கோடிக்கணக்கான சொத்துக்களை எப்படிப் பாதுகாப்பது? உலகப் பெரும் பணக்காரர்களின் (Billionaires) இந்த நீண்ட நாள் கவலைக்கு விடை கண்டுபிடித்துள்ளது சுவிட்சர்லாந்து.
சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள புரூனிக் மலைப்பகுதியில் (Brunig Pass), பெரும் பணக்காரர்களின் தங்கம், ஆடம்பரக் கார்கள், அரிய கலைப் பொருட்கள் மற்றும் விலைமதிப்பற்ற ஒயின் பாட்டில்களைப் பாதுகாப்பதற்காகப் பிரம்மாண்டமான பாதாளப் பாதுகாப்புப் பெட்டகங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் அதிகரிக்கும் பன்றிக்காய்ச்சல் (H1N1): பெங்களூரு பள்ளியில் 500 பேருக்கு உடல்நலக்குறைவு – எச்சரிக்கை அறிகுறிகள், தடுப்பு நடவடிக்கைகள் என்ன?
Trisha Krishnan:இது அநியாயம், ஆணாதிக்கம், நீங்க தைரியமா இருங்க த்ரிஷா: குவியும் ஆதரவு
Exclusive: தவெக ஆட்சியில் ஊழலற்ற நிர்வாகம்: ராமசுப்பிரமணியன் சிறப்புப் பேட்டி!
மலைக்கு அடியில் 100 மீட்டர் ஆழத்தில் ஒரு ரகசிய உலகம்!
‘ புரூனிக் மெகா சேஃப் ‘ (Brற்nig Mega Safe AG) என்ற சுவிஸ் நிறுவனம் இந்தத் தற்காப்பு அரண் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. திடமான பாறை மலைக்கு உள்ளே, சுமார் 100 மீட்டர் (330 அடி) ஆழத்தில் குடைந்து இந்த அதிநவீன பெட்டகங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
அணுஆயுதத் தாக்குதல், சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் என எதனாலும் இந்த பாதாளக் கோட்டையை அசைக்க முடியாது என்பதுதான் இதனுடைய ஆகச்சிறந்த சிறப்பம்சமாகும்.
ஆரம்ப விலை: இதில் ஒரு சிறிய அளவிலான அறையை 99 ஆண்டுகள் குத்தகைக்கு (Lease) எடுப்பதற்கான ஆரம்ப விலையே 5,00,000 சுவிஸ் ஃபிராங்க் ஆகும். இதன் இந்திய மதிப்பு சுமார் ₹5.8 கோடி (5.8 Crores) ஆகும்.
இது வெறும் பொருட்களைப் பூட்டி வைக்கும் லாக்கர் அல்ல. அரிய ஓவியங்கள் மற்றும் ஒயின்கள் கெட்டுப்போகாதவாறு உள்ளே குறிப்பிட்ட வெப்பநிலையும் ஈரப்பதமும் எப்போதும் தானியங்கி முறையில் பராமரிக்கப்படும்.
வெளியுலகத் தொடர்பே துண்டிக்கப்பட்டாலும், உள்ளே இருக்கும் மின்சாரம் மற்றும் காற்று சுத்திகரிப்பு வசதிகள் தொடர்ந்து இயங்கும் வண்ணம் சுயசார்பு தொழில்நுட்பத்துடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பணக்காரர்கள் தங்களது ஃபெராரி, லம்போர்கினி போன்ற ஆடம்பரக் கார்களை நேரடியாக ஓட்டிச் செல்லும் வகையில் ரகசிய சுரங்கப்பாதை நுழைவாயில்களும் இதில் உள்ளன.
எழும் விமர்சனங்கள்
அமைதியான ஆல்ப்ஸ் மலைக் கிராமமான லங்கெர்னில் இந்தத் திட்டம் உருவாக்கப்படுவது உள்ளூர் மக்களுக்குப் பெரிய வரி வருவாயைத் தரும் என்றாலும், சமூக ஆர்வலர்கள் மத்தியில் இது விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது. “உலகமே அழிந்தாலும் பணக்காரர்கள் மட்டும் தங்களது சொகுசு வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள இந்தத் திட்டம் வழிவகை செய்கிறது” என்று பலரும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



