
ஒரு காலத்தில் வயதானவர்களை மட்டுமே இடுப்புவலி தாக்கியது. இன்று வயது பேதமின்றி எல்லோருமே இடுப்பு வலியால் பாதிக்கப்படுகின்றனர். நாளுக்கு நாள் இடுப்பு வலியால் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
“பெரும்பாலும் இடுப்புவலியை எல்லோருமே அலட்சியப்படுத்துகின்றனர். முதியவர்கள் இதை தேய்மானம் அல்லது அழற்சி காரணமாக வருகிறது என்றும், முதுமையின் இயல்பான ஒரு பகுதி என்றும் எடுத்துக்கொள்கின்றனர். அதே நேரம் இளைஞர்கள் இதனை அதிக உழைப்பு, உடற்பயிற்சி, நீண்டநேரம் உட்கார்ந்திருப்பது அல்லது தசைப்பிடிப்பு ஆகியவற்றின் மீது பழிபோடுகின்றனர்.
இடுப்புவலியை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஒருவருக்கு இடுப்புப் பகுதியைச் சுற்றி தொடர்ந்து வலி ஏற்படும்போது, குறிப்பாக இளைஞர்கள் அல்லது நடுத்தர வயதினருக்கு இடுப்புவலி ஏற்படும்போது, கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்…”
“முதலில் புரிந்துகொள்ளப்பட வேண்டிய விஷயங்களில் முதன்மையானது, வலி எங்கு இருந்து
ஆரம்பிக்கிறது என்பதுதான். முதுகெலும்புப் பிரச்னைகள் காரணமாகப் பிட்டம், தொடை அல்லது காலின் கீழ்ப் பகுதி வரை வலி ஏற்படக்கூடும் என்பதால், பலர் கீழ் முதுகு வலியையும், இடுப்புவலியையும் குழப்பிக்கொள்கிறார்கள்.
உண்மையான இடுப்புவலி பொதுவாக இடுப்பு இடுக்கு, இடுப்பின் வெளிப்புறம் அல்லது முன்பகுதியில் உணரப்படும். ஆனால், அது பிட்டம், தொடை அல்லது முழங்காலில் கூட உணரப்படலாம்.
இது பொதுவாக நடக்கும்போது, நாற்காலியில் இருந்து எழுந்து நிற்கும்போது, படிக்கட்டுகளில் ஏறும்போது, படுக்கையில் புரண்டு படுக்கும்போது அல்லது நீண்ட நேரம் உட்கார்ந்துவிட்டு, பிறகு எழுந்து
இந்த வலி இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு நீடித்திருந்து, குணமாகவில்லை
என்றால், அதை அலட்சியப்படுத்தக்கூடாது…” என்ற அருண் கண்ணன், இடுப்பு வலிக்கான காரணங்களைப் பட்டியலிட்டார். “இந்தியர்களின் இடுப்புவலிக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று, ‘அவாஸ்குலர் நெக்ரோசிஸ்’ – சுருக்கமாக ஏவிஎன் – ஆகும். இது இடுப்பு மூட்டின் பந்து போன்ற பகுதியான ஃபெமரல் ஹெட்டில் ஏற்படுகிறது.
ஏவிஎன் பாதிப்பில், எலும்பின் இப்பகுதிக்குச் செல்லும் இரத்த ஓட்டம் குறைந்து, அது பலவீனமடைந்து, படிப்படியாக அதன் வடிவத்தை இழக்கிறது. பொதுவாக 25 முதல் 50 வயதிற்குள் ஏவிஎன் பாதிப்பு ஏற்படுகிறது. பல நோயாளிகளுக்கு இதற்கான தெளிவான காரணம் எதுவும் கண்டறியப்படவில்லை.
ஆனாலும், நீண்ட கால ஸ்டெராய்டு பயன்பாடு, அதிகப்படியான மது அருந்துதல், கடந்த காலத்தில் ஏற்பட்ட இடுப்புக் காயம், அனிமியா (சிக்கிள் செல் நோய்), சில ஆட்டோ இம்யூன் நோய்கள் மற்றும் சில இரத்தக் கோளாறுகள் ஆகியவை இதற்கான அபாயக் காரணிகளாகும்.
நாம் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், ஏவிஎன் நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் அதைக் குணப்படுத்த முடியும். ஃபெமரல் ஹெட் முற்றிலும் சிதைந்து அல்லது வடிவத்தை இழந்துவிட்டால், இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அவசியமாகலாம்.மூட்டு அழற்சி நோய்கள் இடுப்புவலிக்கு மற்றொரு முக்கியமான காரணமாகும். முடக்குவாதம் என்பது பல மூட்டுகளைப் பாதிக்கக்கூடிய ஒரு ஆட்டோ இம்யூன்நிலையாகும்.
அதே நேரம் அன்கிலோசிங் ஸ்பாண்டைலிடிஸ் என்பது முதன்மையாக முதுகெலும்பைப் பாதிக்கிறது. இந்தப் பாதிப்புகள் இடுப்பை தாக்கும்போது, அவை பெரும்பாலும் இளம் நோயாளிகளுக்கு வலி, விறைப்புத்தன்மை மற்றும் படிப்படியான மூட்டு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
நல்ல செய்தி என்னவென்றால், இந்த நிலைகளுக்கான சிகிச்சை இப்போது கணிசமாக மேம்பட்டுள்ளது. சரியான நேரத்தில் கண்டறிந்து, மருந்துகளைத் தவறாமல் உட்கொள்வதன் மூலம், கடுமையான மூட்டு பாதிப்பைத் தவிர்க்கலாம். துரதிர்ஷ்டவசமாக, சில நோயாளிகள் பக்கவிளைவுகளுக்கு பயந்து மருந்துகளைத் தவிர்க்கிறார்கள். அறிகுறிகள் மோசமடைந்த பிறகு அவர்கள் மீண்டும் மருத்துவரிடம் வரும்போது, இடுப்பு மற்றும் பிற மூட்டுகள் ஏற்கனவே சேதமடைந்திருக்கக்கூடும்.
அடுத்து, இந்தியாவில் இடுப்பில் ஏற்படும் காசநோய் மற்றொரு முக்கிய காரணியாக உள்ளது. இடுப்புத் தொற்று எப்போதும் கடுமையான அறிகுறிகளுடன் வெளிப்படாமல் போகலாம். தொடர்ந்து இருக்கும் வலி, இரவு நேர வலி, ஓய்வெடுக்கும்போது கூட வலி ஏற்படுதல், லேசான காய்ச்சல், பசியின்மை அல்லது எதிர்பாராத உடல்எடை குறைவு ஆகியவை இதன் எச்சரிக்கை அறிகுறிகளாகும்.
இந்த அறிகுறிகளுக்கு அவசர மருத்துவப் பரிசோதனை தேவைப்படுகிறது. ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால், இடுப்பு காசநோயை மருந்துகளின் மூலமே குணப்படுத்தமுடியும். தாமதம் செய்தால் இடுப்பு மூட்டு நிரந்தரமாக அழிய நேரிடலாம்…
பரிசோதனைகளைப் பற்றியும் பகிர்ந்தார்.
“இதன் கண்டறிதல் ஒரு முழுமையான மருத்துவப் பரிசோதனையுடன் தொடங்குகிறது. சந்தேகிக்கப்படும் காரணத்தைப் பொறுத்து, மருத்துவர்கள் எக்ஸ்ரே, எம்ஆர்ஐ மற்றும் உடலில் அழற்சி இருப்பதைக் கண்டறிய சில இரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தலாம்.
எக்ஸ்ரேயில் ஆரம்பக்கட்ட மாற்றங்கள், தெளிவாகத் தெரியாத ஏவிஎன் போன்ற நிலைகளில் எம்ஆர்ஐ பயனுள்ளதாக இருக்கும். காசநோய் அல்லது தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும்போது, மூட்டுத் திரவம் அல்லது திசு பரிசோதனை தேவைப்படலாம்ஸ”
“சிகிச்சையானது நோயின் காரணம் மற்றும் அதன் கட்டத்தைப் பொறுத்தது. ஆரம்பக்கட்ட ஏவிஎன் பாதிப்பில், ‘கோர் டிகம்ப்ரஷன்’ போன்ற செயல்முறைகள் செய்யப்படும். சில தேர்ந்தெடுக்கப்பட்ட நோயாளிகளுக்கு எலும்பு மஜ்ஜை சார்ந்த உயிரணு சிகிச்சையுடன் சேர்த்து செய்யப்படும்போது, அறிகுறிகளில் இருந்து நிவாரணம் அளித்து நோயின் தீவிரத்தைத் தாமதப்படுத்தலாம்.சிகிச்சை முறை அறி
மூட்டு அழற்சி உள்ளவர்களுக்கு, நவீன மருந்துகள் மற்றும் பயோலாஜிக் சிகிச்சைகள் போன்றவை பெரும்பாலும் அழற்சியைக் குறைத்து மூட்டு சேதமடைவதை மெதுவாக்குகின்றன. காசநோயைப் பொறுத்தவரை, துல்லியமான நோயறிதலும், சரியான காசநோய் எதிர்ப்பு சிகிச்சையும் முதன்மையானது. வலி கடுமையாக இருக்கும்போதும், அன்றாட செயல்பாடுகள் முடங்கும்போதும், மூட்டு கடுமையாகச் சேதமடைந்திருக்கும்போதும் பொதுவாக இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகின்றது.
பிசியோதெரபி இதில் முக்கியப்பங்கு வகிக்கிறது; ஆனாலும், அது ஏவிஎன், மூட்டு அழற்சி அல்லது தொற்றைக் குணப்படுத்தாது. ஆனால், அது இடுப்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயக்கத்தை பராமரிக்கவும், விறைப்புத்தன்மையைக் குறைக்கவும், பலவீனமான தசைகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.
இடுப்புப் பிரச்னை கண்டறியப்பட்டால், உடல் எடையை நிர்வகித்தல், புகைபிடிப்பதை நிறுத்துதல், மருத்துவர் ஆலோசனையின்றி ஸ்டெராய்டுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல் மற்றும் இடுப்புக்கு அதிக அதிர்வை ஏற்படுத்தும் செயல்பாடுகளைத் தவிர்த்தல் போன்ற வாழ்க்கைமுறை மாற்றங்கள் முக்கியமானதாகின்றன. இடுப்புவலியை அலட்சியப்படுத்தக்கூடாது. குறிப்பாக அது தொடர்ந்து இருக்கும்போது, உடல் செயல்பாடுகளுடன் தொடர்புடையதாக இருக்கும் போது அல்லது இரவு நேர வலி, காய்ச்சல், உடல்எடை குறைப்பு அல்லது நடப்பதில் சிரமம் ஆகியவற்றுடன் சேர்ந்து வரும்போது கவனம் தேவை.
இடுப்புவலியுடன் சேர்ந்து எடையைத் தாங்கமுடியாமை, விழுந்த பிறகு கடுமையான வலி, மூட்டு வடிவம் மாறுதல், வேகமாக மோசமடையும் வீக்கம், அல்லது காலில் உணர்ச்சியற்ற தன்மை அல்லது பலவீனம் ஆகியவை இருந்தால் உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாடுங்கள். ஆரம்பகால நோயறிதல் சிறந்த பலனைத் தரும். பல சந்தர்ப்பங்களில், சரியான நேரத்தில் செய்யப்படும் சிகிச்சை நோயைக் கட்டுப்படுத்தவும், மூட்டைப் பாதுகாக்கவும், வலியைக் குறைக்கவும், நோயாளிகள் அறுவை சிகிச்சையைத் தவிர்க்க அல்லது தள்ளிப்போடவும் உதவும்..



