அமெரிக்காவில் தாய், தம்பியை கொலை செய்ததாக இந்திய வ சிறுவன் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் மசாசூசெட்ஸில் ஆக்டனில் உள்ள மார்த்தா லேன் பகுதியில் வசிந்து வருபவர் சுதா (44). இவரது கணவர் அரவிந்த். இவர்களுக்கு அர்ஜூன்(17), சித்தார்த் (14) என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த செவ்வாயன்று காலை வேலைக்கு செல்வதற்கு முன்பாக அரவிந்த்த தனது மனைவியிடம் பேசியதாக தெரிகின்றது. அதற்கு பின் சுதாவை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதனை தொடர்ந்து அவர் ஆக்டன் காவல்நிலையத்துக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளார். எனவே போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு விரைந்தனர். அங்கு சுதாவும், சித்தார்த்தும் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தனர். சித்தார்த் முதல் தளத்திலும், சுதா வீட்டின் கீழ் தளத்திலும் இறந்து கிடந்தனர். அவரது மூத்த மகன் அர்ஜூன் வீட்டில் இல்லை. இதனை தொடர்ந்து அவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் வேய்லாண்ட் நகரில் அர்ஜூன் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். கடந்த சில நாட்களாகவே அர்ஜூனின் நடவடிக்கையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அவர் தனது குடும்பத்தை கொல்வது தொடர்பான யோசனைகளை இணையத்திலும், சாட்ஜிபிடியை பயன்படுத்தியும் தேடி இருப்பது தெரியவந்துள்ளது. போலீசார், நீதிமன்றத்தில் அர்ஜூனை ஆஜர்படுத்தினார்கள்



