அமெரிக்க கிரீன் கார்டு பெறுவதில் இந்தியர்களுக்கு செப்டம்பர் 18 முதல் புதிய சிக்கல்

அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமைக்கான கிரீன் கார்டு பெறுவதற்கான விதிகளில் டிரம்ப் நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வரும் செப்டம்பர் 18 முதல் அமலுக்கு வரும் இப்புதிய விதியின்படி, மருத்துவ உதவி, உணவு மானியம் உள்ளிட்ட அரசு நலத்திட்டங்களைப் பயன்படுத்தியவர்களுக்கு இனி கிரீன் கார்டு மறுக்கப்படும்.

மேலும், விண்ணப்பதாரரின் வயது, உடல்நலம், குடும்பம் மற்றும் நிதி நிலை ஆகியவையும் இனி கடுமையாக ஆய்வு செய்யப்படும். இது அமெரிக்காவில் கிரீன் கார்டுக்காகக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்களைப் பெரிதும் பாதிக்கும். அகதிகள் உள்ளிட்ட சில தரப்பினருக்கு மட்டும் இவ்விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.