பல முறை கேட்டும் நடிகை மல்லிகா பிக் பாஸ் ஷோவில் பங்கேற்காதது ஏன்?

:

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு பல சீசன்களாக அழைப்பி விடுத்தும் ஏன் போகவில்லை என்கிற காரணத்தை தெரிவித்திருக்கிறார் பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத். அவர் தற்போது ட்ரெய்டர்ஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கிறார். அந்த ஷோவில் மல்லிகாவுக்கு தான் அதிகம் சம்பளம் என்கிறார்கள்.
முக்கிய அம்சங்கள்:

மல்லிகாவா?: பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தொகுத்து வழங்கவிருக்கும் ட்ரெய்டர்ஸ் ரியாலிட்டி ஷோவின் இரண்டாவது சீசனில் கலந்து கொள்கிறார் மல்லிகா ஷெராவத் என்று பேசப்படுகிறது. ரியாலிட்டி நிகழ்ச்சியில் மல்லிகா கலந்து கொள்ள வாய்ப்பே இல்லை என்று ரசிகர்கள் பேசிய நிலையில் உண்மை தெரிய வந்திருக்கிறது.

சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரபலங்கள் பலர் விரும்புகிறார்கள். ஆனால் அந்த பிக் பாஸ் வாய்ப்பு பல முறை தன்னை தேடி வந்தபோதிலும், எனக்கு விருப்பம் இல்லை என்று கூறியவர் மல்லிகா ஷெராவத். அவர் போய் இன்னொரு ரியாலிட்டி ஷோவுக்கு போட்டியாளராக செல்வாரா என்பதே பலரின் கேள்வியாக இருந்தது.

ட்ரெய்டர்ஸில் மல்லிகா: இது குறித்து Etimes-க்கு அளித்த பேட்டியில் மல்லிகா ஷெராவத் கூறியதாவது, நான் ட்ரெய்டர்ஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்பதாக நீங்கள் கணித்தது சரி தான். பணம் முக்கியம் இல்லை என்று சொல்பவர்கள் பொய் சொல்கிறார்கள். நாம் யாரையும் சார்ந்து வாழாத போது அது ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் சரி பணம் கண்டிப்பாக தேவை. நம் வேல்யூ நமக்கு தெரிந்திருக்க வேண்டும்.

எனக்கு சரிபட்டு வராது என்கிற சம்பளத்திற்கு வேலை செய்ய நான் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டேன். எனக்கு வேலை செய்ய ரொம்ப பிடிக்கும். பணம் சம்பாதிக்க பிடிக்கும். எனக்கு தேவைப்படுவதை வாங்க பிடிக்கும். பிக் பாஸ் வீட்டிற்கு செல்ல மறுத்ததற்கு காரணம் உண்டு. எனக்கு அந்த நிகழ்ச்சியின் format பிடிக்கவில்லை. ஒரு நடிகையாக பிக் பாஸ் ஷோவுக்கு என்னால் எதுவும் செய்ய முடியாது என்று தோன்றியது. எனக்கு அந்த நிகழ்ச்சியில் ஆர்வம் கிடையாது. ட்ரெய்டர்ஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எடுத்த எடுப்பிலேயே நான் ஓகே சொல்லவில்லை. முதலில் தயங்கினேன். நாம் நிஜ வாழ்க்கையில் செய்யாததை எல்லாம் ட்ரெய்டர்ஸில் செய்வோம் என்றார்.

20 பேர் கலந்து கொள்ளும் ட்ரெய்டர்ஸ் 2 அமேசான் பிரைமில் ஆகஸ்ட் 13ம் தேதி முதல் ஒளிபரப்பாகவிருக்கிறது. மனதில் பட்டதை மறைக்காமல் பேசுவதற்கு பெயர் போனவர் மல்லிகா ஷெராவத். அதனால் கரண் ஜோஹர் நிகழ்ச்சியில் மல்லிகாவால் சுவாரஸ்யம் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராம் கபூரும், பிக் பாஸும்: பிக் பாஸுக்கு நோ சொன்னது மல்லிகா மட்டும் அல்ல டிவி நடிகர் ராம் கபூரும் தான். பிக் பாஸ் 19 நிகழ்ச்சியில் ராம் கபூர் மட்டும் அல்ல அவரின் காதல் மனைவியான டிவி நடிகை கௌதமியும் போட்டியாளராகிறாராம் என முதலில் தகவல் வந்தது.

அது குறித்து ராம் கபூரிடம் கேட்டபோது, ரூ. 20 கோடி கொடுத்து அழைத்தாலும் போக மாட்டேன் என்றார். பிக் பாஸ் வீட்டிற்கு செல்ல மாட்டேன் என்றவரோ லாக் அப் 2 ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு சென்றார். ஃபரா கான், ரித்தேஷ் தேஷ்முக் தொகுத்து வழங்கிய அந்த நிகழ்ச்சியில் ராம் கபூர் நடந்து கொண்ட விதம் பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
லாக் அப் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தன் பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் கூட தெரியாத ரகசியத்தை கூறினார். அதாவது பள்ளியில் படித்தபோது சீனியர் மாணவன் தன்னை தொடக் கூடாத இடத்தில் தொட்டதால் ரொம்ப மன அழுத்தம் ஏற்பட்டதாக கூறினார் ராம் கபூர். அந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து மனைவிக்கு மட்டுமே தெரியும் என்றார்.