போதைப்பொருள் கடத்தல்காரலொக்கு பெட்டி’யின் ரூ.35 மில்லியன் முடக்கம்!

 

பணப்புழக்கச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘லொக்கு பெட்டி’ என அழைக்கப்படும் சுஜீவ ருவான் குமார டி சில்வாவிற்குச் சொந்தமான சுமார் 35 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, வெலிப்பன்ன பகுதியில் அமைந்துள்ள 15 பேர்ச் காணியும், அதில் கட்டப்பட்டுள்ள இருமாடி வீடும் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப்பொருள் கடத்தல் மூலம் உழைக்கப்பட்ட பணத்தைக் கொண்டே இந்தச் சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படும் நிலையில், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

 

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கு தொடர்பில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு இன்று (22) வழங்கப்படவுள்ள நிலையில், நௌபர் மௌலவி உட்பட 24 பிரதிவாதிகள் இன்று காலை மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவ்வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க தலைமையில், நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க மற்றும் நீதிபதி இராமநாதன் கண்ணன் உள்ளிட்ட மூவரடங்கிய நிரந்தர மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வில் வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது.

தீர்ப்பு வழங்கப்படும் இன்றைய நாளில் பொலிஸார் நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பினை பலப்படுத்தியுள்ளனர்.