கிழக்கு ஆப்கனில் பாகிஸ்தான் போர் விமானங்கள் குண்டு மழை 28 தீவிரவாதிகள் பலி

 

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளின் மறைவிடம் என சந்தேகிக்கப்படும் இடங்களின் மீது பாகிஸ்தான் போர் விமானங்கள் நேற்று வான்வழித் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டதாக காபூல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைக்கு அருகே நடந்த இந்த தாக்குதல்கள் இருநாட்டுக்கும் இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளதை காட்டுகின்றன.

இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் செய்ய சீனா உள்ளிட்ட பிராந்திய நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகளை சிக்கலாக்கும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் பாதுகாபபு படைகள் மீது எல்லை அருகே நடத்தப்பட்ட இரண்டு கொடூரமான தாக்குதல்களை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் இருக்கும் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என பாகிஸ்தான் எச்சரித்த பிறகே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.