u.s மீண்டும் தாக்குதலைத் தொடங்கினால் புதிய ஆயுதங்கள்,

ஈரான் எச்சரிக்கை u.s மீண்டும் தாக்குதலைத் தொடங்கினால் புதிய ஆயுதங்கள்,புதிய உத்திகளைப் பயன்படுத்துவோம்:

அமெரிக்கா மீண்​டும் தாக்​குதலைத் தொடங்​கி​னால் புதிய ஆயுதங்​கள் மற்​றும் போர் உத்​தி​களைப் பயன்​படுத்துவோம் என ஈரான் ஐஆர்​ஜிசி செய்​தித் தொடர்​பாளர் எச்சரிக்கை விடுத்​துள்​ளார்.

அமெரிக்​கா, ஈரான் இடையி​லான மோதல் தொடர்​கிறது. இந்​நிலை​யில், இஸ்​லாமிய புரட்​சிகர பாது​காப்​புப் படை (ஐஆர்​ஜிசி) செய்​தித் தொடர்​பாளர் பிரி​கேடியர் ஜெனரல் ஹொசைன் மொஹெப்பி அல்​-அலம் தொலைக்​காட்​சிக்கு அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: அமெரிக்கா​வுட​னான மோதல் இன்​னும் முடிவுக்கு வரவில்​லை. நீண்​ட​கால மோதலுக்கு ஐஆர்​ஜிசி தயாராக இருக்​கிறது.

 

அமெரிக்கா மீண்​டும் தாக்​குதலைத் தொடங்​கி​னால் தக்க பதிலடி தரப்​படும். குறிப்​பாக, இது​வரை பயன்​படுத்​தாத, ரகசி​ய​மாக வைத்​துள்ள புதிய ஆயுதங்​களைப் பயன்​படுத்​து​வோம். மேலும் அமெரிக்கா​வுட​னான எந்​தவொரு புதிய மோதலும் முந்​தையதை​விட முற்​றி​லும் மாறு​பட்​ட​தாக, புதிய போர் உத்​தி​களைக் கொண்ட​தாக இருக்​கும். இந்த போர்த் திறன்​கள் உலகையே ஆச்சரியப்​படுத்​தக்​கூடும்.

இந்​தப் போரில் அமெரிக்கா தோற்​கடிக்​கப்​பட்​டுள்​ளது. அதன் தோல்வி வரலாற்​றுச் சிறப்​புமிக்க மற்​றும் அவமானகர​மான தோல்​வி​யாகும். ஆனால் அந்​தத் தோல்​வியை ஒப்​புக்​கொள்​ளும் தைரி​யம் அமெரிக்கா​வுக்கு இல்​லை.

அமெரிக்கா​வுக்​கும் எங்​கள் அமைப்​புக்​கும் இடையே அதி​காரப்​பூர்வ அல்​லது அதி​காரப்​பூர்​வ​மற்ற உறவு​கள் எது​வும் இல்​லை. அந்த நாட்​டுட​னான ராஜதந்​திரத் தொடர்​பு​கள் ஈரானின் வெளியுறவு அமைச்​சகத்​தின் அதி​கார வரம்​புக்​குள் வரும். அதே​நேரம் ஐஆர்​ஜிசி ராணுவம் தயார் நிலை​யில் இருப்​ப​தில் மட்​டுமே கவனம் செலுத்​துகிறது. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​