பிரான்ஸை வெப்ப அலை! 5,700-க்கும் அதிக உயிரிழந்ததாக அறிக்கை!

 

ஐரோப்பிய நாடான பிரான்ஸில் கடந்த மாத பிற்பகுதியில் வீசிய கொடூரமான வெப்ப அலை காரணமாக வழக்கத்தை விட 5,700-க்கும் அதிகமான நபர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பொது சுகாதார அமைப்பு (Santளூ Publique France) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாட்டின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு வெப்பம் உச்சத்தைத் தொட்ட நிலையில், இந்த திடீர் உயிரிழப்புகள் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.

கடந்த ஜூன் 17 முதல் ஜூலை 2 வரையிலான காலக்கட்டத்தில் பிரான்ஸின் பல்வேறு பிராந்தியங்களில் மொத்தம் 21,674 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. சாதாரண காலங்களில் எதிர்பார்க்கப்படும் உயிரிழப்புகளை விட இது 5,764 மரணங்கள் அதிகம் என்றும், அதாவது வழக்கமான அளவை விட 36% கூடுதல் உயிரிழப்புகள் நேர்ந்துள்ளதாகவும் அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர். இதில் குறிப்பாக 75 வயதைக் கடந்த முதியவர்களே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெப்ப அலையின் தாக்கம் தலைநகர் பாரிஸ் உள்ளடங்கிய ‘இலே-டி-பிரான்ஸ்’ (டுle-de-France) பிராந்தியத்திலேயே மிகக் கடுமையாக இருந்துள்ளது. அங்கு மட்டுமே உயிரிழப்புகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட 80% வரை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜூன் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸைக் கடந்து புதிய உச்சத்தை எட்டியதால், மருத்துவமனைகளில் வெப்பக் காய்ச்சல் மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் உயர்ந்தது.

கடந்த 2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரான்ஸ் சந்தித்துள்ள மிகக் கொடூரமான வெப்ப அலை இதுவே என்று சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். புவி வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றத்தின் தீவிர விளைவுகளே இந்த எதிர்பாராத வெப்பநிலை உயர்வுக்கு முதன்மைக் காரணம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ள நிலையில், பிரான்ஸ் அரசு பொதுமக்களுக்குப் பல்வேறு அவசர கால வழிகாட்டுதல்களை வழங்கி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.