இங்கிலாந்தின் லண்டன் நகருக்கு வடக்கே உள்ள பெட்ஃபோர்ட் (Bedford) பகுதியில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு ரயில் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார் மற்றும் 89 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று மாலை 5:15 மணியளவில் இந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது
விபத்தில் ஒரு ரயில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த 89 பேரில் 11 பேர் மிகவும் ஆபத்தான நிலையிலும், 22 பேர் பலத்த காயங்களுடனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற 56 பேருக்கு சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து’
ஈஸ்ட் மிட்லாண்ட்ஸ் ரயில்வே (East Midlands Railway) நிறுவனத்திற்குச் சொந்தமான கோர்பியிலிருந்து லண்டன் செயின்ட் பான்கிராஸ் நோக்கிச் சென்ற ரயிலும், நாட்டிங்காமிலிருந்து லண்டன் செயின்ட் பான்கிராஸ் நோக்கிச் சென்ற ரயிலும் இந்த விபத்தில் சிக்கின.
விபத்தைத் தொடர்ந்து லண்டன் போக்குவரத்து போலீசாரால் ‘முக்கிய அவசரநிலை’ (Major Incident) பிரகடனப்படுத்தப்பட்டு, 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மற்றும் 6 ஏர் ஆம்புலன்ஸ்கள் மூலம் மீட்புப் பணிகள் தீவிரமாக நடத்தப்பட்டன. இந்த விபத்தின் காரணமாக லண்டன் செயின்ட் பான்கிராஸ் நிலையத்திற்கான அனைத்து ரயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன




