…
மதுரை காளவாசல் பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் ஜூவல்லரியில் ரூ.50 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தனைக்கும் கடை திறந்து 15 நாட்களில் இந்த கொள்ளை சம்பவம் அங்கு நடந்துள்ளது.
இது தொடர்பாக தடவியல் அறிவியல் தடயங்களை சேகரித்து வரும் நிலையில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த கடையிலிருந்து 30 சதவீத நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.40 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை என மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. முகமூடி அணிந்து வந்த ஒற்றை நபர் பின்வாசலை உடைத்து உள்ளே புகுந்து கைவரிசை காட்டியதாக சொல்லப்படுகிறது..
அதாவது மூன்று மாடி கட்டிடத்தின் அருகே அமைக்கப்பட்டிருந்த சாரத்தை பயன்படுத்தி நகைக்கடையின் மாடி வழியாக உள்ளே புகுந்த மர்மநகர் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது.
முன்பகுதியில் ஒரே ஒரு காவலாளி மட்டுமே பணியில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.. எனவே வட மாநிலங்களுடன் இதற்கு தொடர்பு உள்ளதா என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.



