தூத்துக்குடியில் தவெக சார்ப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் கலந்துக் கொண்டார்.அப்போது பேசியவர்,சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் Party Fund என்ற வார்த்தை மட்டும் தான் சொன்னார். உடனே எதிர்வரிசையில் இருந்த திமுகவினர் கடும் அமளியில் ஈடுப்பட்டு வெளியேறினர்.அதுமட்டுமில்லை திமுகவில் உள்ள அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளது இன்று ஊரில் ஒரு தரும் கிடையாது.
தூத்துக்குடி தவெக பொதுக்கூட்டம்
அன்று சட்டமன்றத்தில் கேட்டார்கள் என்று பேசியதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது. ஆனால் என்று தற்பொழுது ஆதாரத்துடன் ஊழல் செய்யப்பட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர் கரூர் செந்தில் பாலாஜி பேசிய பேச்சுக்கள் இன்று அவர் ஊரிலேயே கிடையாது. எங்க இருக்கார் என்று தெரியவில்லை. ஆனால் நிபந்தனை ஜாமினுக்கு கையெழுத்து போட வர வேண்டும் அதற்கு முன்னரே செந்தில் பாலாஜி தலைமறைவாகிவிட்டார். இவ்வளவு பயம் தேவையா? இதற்கு எதற்கு மக்கள் பணத்தை கொள்ளையடிக்க வேண்டும்.
சிக்கலில் இருக்கும் ஓபிஎஸ்? திமுக கொடுத்த சிக்னல்?
இதற்கு ஏன் பயந்து ஒளிந்து ஓட வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து திமுகவினர் டாஸ்மாக்கில் என்ன ஊழல் செய்திருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பு வருகிறார்கள். பதிவு செய்யப்பட்ட 5,400 பார்கள் செந்தில் பாலாஜியின் கட்டுப்பாட்டின் கீழ் ஏலத்தில் எடுத்து செயல்பட்டு வந்துள்ளார். இதன் மூலம் 2000 கோடி ரூ 3000 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது. மேலும் டாஸ்மாக் ஊழல், ரூ.10 ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் இன்று தவெக ஆட்சியில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
திமுக ஊழல் குற்றச்சாட்டு
குறிப்பாக உதயநிதி நண்பர்கள் ரதிஷ் இன்று ஊரில் இல்லை. இவர்கள் அனைவரும் சேர்ந்து தான் தமிழகத்தில் டாஸ்மாக்கில் கொள்ளை அடித்தவர்கள். இந்த ஒரு துறையில் மட்டும் அதிக அளவில் ஊழல் நடந்துள்ளது. மேலும் இது போன்று மற்ற துறைகளிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஒரு குடும்பம் 30 ஆயிரம் கோடியை கொள்ளையடுத்துள்ளதாக திமுக முன்னாள் அமைச்சர் டிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோவில் சொல்லவில்லை.
செந்தில் பாலாஜிலாம் எங்க இருக்காருனே தெரியல
இது உண்மைதான். ஒரு வருடத்தில் 30 ஆயிரம் கோடி என்றால் கடந்த 5 வருடத்தில் 3 லட்சம் கோடி கொள்ளையடித்தவர்களை நாம் எப்படி சும்மா விட வேண்டும். அதுவும மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்களை சும்மாவிடமாட்டோம். அதேபோல், தூத்துக்குடி மாநகராட்சிக்கு நலத்திட்டங்கள் செய்யும் 2000 கோடி போதும் ஆனால் மாநில முழுவதும் பல கோடி ரூபாய் வேலை செய்துள்ளனர் அனைத்திற்கும் அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் தூத்துக்குடியில் துறைமுகம் வந்து 30 வருடங்கள் ஆகிறது ஆனால் மக்களின் வாழ்வாதாரம் மட்டும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது.
அதற்கு முக்கிய காரணம் திமுகவும் அதிமுகவும் தான் இவர்கள் அனைவரையும் புறக்கணித்தும் உள்ளாட்சி தேர்தலில் மீண்டும் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற செய்து அனைத்துவித நலத்திட்டங்களை வழங்கும் என்று அமைச்சர் நிர்மல் குமார் உறுதி அளித்தார். தூத்துக்குடியில் இருந்து திமுக முழுமையாக வெளியேறினால் தான் அனைத்துவித நல்லது நடக்கும். இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. மக்கள் மீண்டும் கவனமாக வாக்களிக்க வேண்டும். என்று அமைச்சர் நிர்மல் குமார் கேட்டுக்கொண்டார்.



