மாயமான 9 தமிழக மீனவர்களின் சடலங்கள்ஆந்திர கடற்கரையில்

 

சென்னை காசிமேடு துறைமுகத்திலிருந்து கடந்த அக்டோபர் 29 அன்று 9 மீனவர்கள் விசைப்படகில் கடலுக்குச் சென்றனர். ‘முரசு’ புயல் எச்சரிக்கை காரணமாக ஆந்திராவின் நிஜாம்பட்டினம் துறைமுகத்தில் படகை நிறுத்திய அவர்கள், நவம்பர் 2 அன்று ராமாயப்பட்டினம் நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.

அப்போது படகின் என்ஜின் பழுதானதால், அருகே இருந்த மற்றொரு படகிற்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் கொடுத்துள்ளனர். அதன் பிறகு தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில், படகின் உரிமையாளர் மீன்வளத் துறையிலும் இந்திய கடலோரக் காவல் படையிலும் புகார் அளித்தார். ஹெலிகாப்டர் மூலம் 2 நாட்களாகத் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கோத்தப்பட்டினம் அருகே 9 மீனவர்களின் சடலங்களும் இன்று பரிதாபமாகக் கரை ஒதுங்கியுள்ளன. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் உடனடியாக ஆந்திராவிற்கு விரைந்துள்ளனர். இச்சோகச் சம்பவத்தால் காசிமேடு பகுதி பொதுமக்கள் மற்றும் மீனவக் குடும்பங்கள் மீளாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.