ட்ரம்ப் தோல்விக்கு ஈரான் போரின் தாக்கமும் ஒரு காரணம்: ட்ரம்ப் ஒப்புதல்

: அமெரிக்க தேர்தலில் குடியரசுக் கட்சியின் தோல்விக்கு ஈரான் போரின் தாக்கமும் ஒரு காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் 435 பிரதிநிதிகள் அவை இடங்களுக்கும், 35 செனட் அவை இடங்களுக்கும், பல்வேறு மாகாணங்களின் ஆளுநர்கள், உள்ளாட்சிப் பதவிகளுக்குமான வாக்குப்பதிவு இந்திய நேரப்படி, கடந்த நவ. 3 ஆம் தேதி மாலை நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை முதல் எண்ணப்பட்டு வந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி கடும் தோல்வியைச் சந்தித்துள்ளது.

மேலும், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையாக இடங்களை ஜனநாயகக் கட்சி வென்றுள்ள நிலையில், குடியரசுக் கட்சியின் தோல்விக்கு ஈரான் மீதான போர்தான் காரணம் என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறினார். அமெரிக்க தேர்தலில் குடியரசுக் கட்சியின் தோல்வி குறித்து பேசிய என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்; நீங்கள் என பிரசாரத்தில் ஏராளமான மக்கள் திரண்டு இருப்பதை பார்த்து இருப்பீர்கள். அந்த அன்பை அப்படியே எங்களது கட்சி வேட்பாளர்களுக்கு கொண்டு சேர்க்க முடியவில்லை.

அமெரிக்க தேர்தலில் குடியரசுக் கட்சியின் தோல்விக்கு ஈரான் போரின் தாக்கமும் ஒரு காரணம். ஈரான் போர் காரணமாக அமெரிக்காவில் எரிவாயு விலை உயர்ந்தது மக்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது. ஈரானுடன் போரில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது; ஈரானுக்கு எதிரான நடவடிக்கையை தொடர்கிறோம். மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் போரில் ஈடுபடுவதே என் முடிவு. இது தான் என் தீர்வு; ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது. அடுத்த இரண்டு ஆண்டுகளிலும் எல்லாவற்றுக்கும் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த நான் விரும்பவில்லை என்று கூறினார்.