காவல் உதவி ஆய்வாளர் பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துக்கொலை! மனைவி செல்வராணி கைது

 

நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில், காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவத்தில் காவல் உதவி ஆய்வாளரின் மனைவி செல்வராணி கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

யார் இந்த உதவி ஆய்வாளர் கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர்தான் இந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் (வயது 58). இவருக்கு தாமதமாகவே செல்வராணி (32) திருமணமானது. ஆனால், செல்வராணிக்கு இது இரண்டாவது திருமணமாகும். முதல் திருமணத்தின் மூலம் ஏற்கெனவே செல்வராணிக்கு ஒரு மகள் இருந்துள்ளார். பின்னர் உதவி ஆய்வாளர் ராஜ் உடனான திருமணத்திற்கு பிறகு ஒரு மகள், ஒரு மகன் பிறந்துள்ளனர்.

இரண்டாவது திருமணம் ராஜ் சென்னை ஆயுதப்படை போலீசில் மோட்டார் வாகன பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் குடும்பத்துடன் நுங்கம்பாக்கம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்திருக்கின்றனர். மூத்த மகள் (16), 2வது மகன் (15), 3வது மகள்(14) மூவரையும் அருகில் உள்ள தனியார் பள்ளியில் படிக்க வைத்திருக்கிறார். டென்ஷன் இல்லாத வேலை, கோயில், குடும்பம் என்று வாழ்க்கை ஸ்மூத்தாகதான் போய்க்கொண்டிருக்கிறது. இப்படி இருக்கையில்தான் நேற்றிரவு ராஜ் அறையிலிருந்து திடீரென புகை கிளம்பியிருக்கிறது.

உயிருடன் எரிப்பு மேல் அறையில் படுத்திருந்த மனைவி செல்வராணி வந்து பார்த்தபோது, ராஜ் உடல் தீயில் எரிந்துள்ளது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் போலீசுக்கும் ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுத்திருக்கின்றனர். இதையடுத்து ராஜ் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. சம்பவம் நடந்த இடத்தில் தடயவியல் துறையினர் மேற்கொண்ட ஆய்வில், பல்வேறு விஷயங்கள் வெளிச்சத்திற்கு வந்திருகின்றன.

பெட்ரோல் வாடை அதாவது ராஜ் உடல் மீட்கப்பட்ட அறையிலிருந்து பெட்ரோல் வாடை அடித்திருக்கிறது. மனைவியிடம் விசாரித்ததில், சமீபத்தில் ராஜ் போக்சோ வழக்கில் சிக்கியதாகவும், இதனால் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறியிருக்கிறார். அப்படியெனில் ராஜ் தற்கொலை செய்துக்கொண்டாரா?

என்கிற கோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். வீட்டின் பக்கத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்தன. மர்ம நபர் அதாவது இந்த சம்பவம் நடந்தபோது ராஜின் வீட்டிலிருந்து மர்ம நபர் ஒருவர் எகிறி குதித்து வெளியே சென்றிருக்கிறார். இது தொடர்பாக செல்வராணியிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மன உளைச்சலில் இருந்தார் என்று சொல்கிறீர்கள்..

ஆனால், கோயிலுக்கும், துணி கடைக்கும், வெளியில் இன்னும் சில இடங்களுக்கும் மனைவியை ராஜ் அழைத்து சென்றிருக்கிறார்.

மன உளைச்சலில் இருப்பவரின் நடவடிக்கை இப்படி இருக்காதே! மட்டுமல்லாது வீட்டிலிருந்து வெளியேறிய மர்ம நபர் யார் என்றும் போலீசார் கேள்வி எழுப்பியிருந்தனர். வலுக்கும் சந்தேகம் இந்த விசாரணையில் மேலும் சில தகவல்கள் தெரிய வந்தன. அதாவது, செல்வராணி அடிக்கடி போனில் பேசி வந்ததாகவும், இதை ராஜ் கண்டித்ததாகவும்.. இருப்பினும் செல்வராணி தனது செயல்பாடுகளை மாற்றிக்கொள்ளாததால், செல்போனை பிடிங்கிவிட்டதாகவும்.. இந்த ஆத்திரத்தில்தான் ராஜை கொலை செய்ததாகவும் செல்வராணி வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

ஆனால், தேவா என்கிற மூன்றாவது நபர் யார்? அவருக்கும் செல்வராணிக்கும் என்ன தொடர்பு? சம்பவம் நடந்த நேரத்தில் தேவா ஏன் அங்கிருந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கான பதில்கள் விரைவில் தெரிய வரும் என்று சொல்லப்படுகிறது.