இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளுக்கு கட்டுப்பாடுகளுமின்றி பயணிக்க ஈரான் அனுமதி!..

.

 

ஹார்முஸ் வழியாக இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளுக்கு அனுமதி: ஈரானின் முக்கிய முடிவு. ஹார்முஸ் வழியாக எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி பயணிக்க இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளுக்கு ஈரான் அனுமதி!”,

:”எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி ஹார்முஸ் வழியாக பயணிக்க இந்தியா, சீனா, ஈராக் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது

ஈரான். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான மோதலால், ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ள நிலையில், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு மட்டும் இந்த விலக்கை அளித்துள்ளது..

இதுதொடர்பாக செய்தியாளர்களிடையே பேசிய ஈரானின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழு துணைத் தலைவர் அமீர் ஹயாத் மொகாதம்.,“ஹார்முஸ் ஜலசந்தியின் போக்குவரத்து கட்டுப்பாடுகளிலிருந்து இந்தியா, சீனா, ஈராக் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கு நாங்கள் தற்போது விலக்கு அளித்துள்ளோம் .

இந்த நாடுகளின் கப்பல்கள் தடையின்றி செல்கின்றன, மேலும் அமெரிக்கர்களும் அவற்றை இடைமறிப்பதில்லை” என தெரிவித்தார். .

என்னக் காரணம்?
ஈரானுக்கு இருக்கும் அத்தியாவசிய மருந்து பொருட்களின் தேவையே இந்த தளர்வுக்கு காரணம் என அந்நாட்டின் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிற்கு இந்த அனுமதியை வழங்கியதன் மூலம், இங்கிருந்து தனக்குத் தேவையான மருத்துவப் பொருட்களை இறக்குமதி செய்துகொள்ள ஈரான் திட்டமிட்டுள்ளது. .

சீனாவை பொறுத்தவரை போரில் அந்நாட்டின் ஆதரவைப் பெறுவதே இந்த விலக்கிற்கான நோக்கம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளிடமிருந்து ஈரான் அழுத்தத்தைச் சந்தித்து வரும் நிலையில், சீனாவின் ராஜதந்திர ஆதரவுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு.

பரஸ்பர வணிக ஒப்பந்தங்கள் மற்றும் பிராந்திய உறவுகளின் அடிப்படையில் ஈராக் மற்றும் கத்தாருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது..

இந்தியாவிற்கு கிடைத்த பலன் என்ன?

ஹார்முஸ் ஜலசந்தி உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிக்கு முக்கிய கடல் போக்குவரத்து பாதையாக அமைந்துள்ளது.

இந்தியாவின் ஒட்டுமொத்த எல்.பி.ஜி இறக்குமதியில் சுமார் 90 சதவீதமும் , கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 45 சதவீதமும், கத்தார் மற்றும் அமீரகத்திலிருந்து பெறப்படும் எல்.என்.ஜி இறக்குமதியில் 50 விழுக்காட்டுக்கு மேல் இந்த வழித்தடத்தின் மூலமாகவே இந்தியாவை வந்தடைகின்றன.

இதனால் தேவையான எரிபொருளை இந்தியா எவ்வித இடையூறும் இன்றி இறக்குமதி செய்துகொள்ள முடியும்.