இப்போதெல்லாம் ஒரு திருமணம் கூடி வந்து மணவறை வரை வந்து நடப்பது என்பது பிரம்மப்பிரயத்தனமாக இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து பகிர்ந்தார் கீதா தெய்வசிகாமணி. இவர் கடந்த 30 வருடமாக ‘கீதம் மேட்ரிமோனியல்’ திருமண தகவல் மையம் ஒன்றிைன நடத்தி வருகிறார். ‘‘நாங்க மணமகன், மணமகளை நேரடியாக வரவழைத்துதான் பதிவு செய்கிறோம். அதனால் அவர்களின் எண்ணங்கள் என்னவென்று தெரிந்து கொள்ள முடிகிறது.
மணப்பெண்கள் நிறைய படிக்கிறார்கள். அவர்களின் கல்வி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப சம்பளமும் உயர்கிறது. சிலர் சொந்தமாக தொழில் செய்கிறார்கள்.திருமணம் திட்டமிடு
* வார இறுதி நாட்களில் ரிலாக்ஸ் செய்துகொள்ள நண்பர்களுடன் வெளியே செல்கிறார்கள்.
* சிலர் அலுவலகம் அல்லது நண்பர்களின் பிறந்த நாள் பார்ட்டியின் போது மது அருந்தும் பழக்கம் கொண்டிருக்கிறார்கள்.
* மணமகனிடம் உள்ள சொத்து விவரங்கள் குறித்து விவரிக்கிறார்கள்.
* மணமகன் மணப்பெண்ணைவிட குறைந்த சம்பளம் என்றால் அவரை வேறு வேலைக்கு போகச் செய்ய சொல்கிறார்கள். இவை எல்லாம் பெண்களின் எதிர்பார்ப்புகளாக இருக்கிறது. அதே சமயம் மணமகனின் எதிர்பார்ப்புகளும் ஓரளவுக்கு இதே மனநிலையில்தான் உள்ளது.
* பெண் தன்னைவிட அதிகம் சம்பாதித்தால் எதிர்காலத்தில் இருவரும் இணைந்து வீடு, நிலம் வாங்க நினைக்கிறார்கள்.சமூக உதவி செய்
* வேலைக்கு செல்லவில்லை என்றாலும் நல்ல நிறமாகவும் அழகாகவும் இருக்க வேண்டும்.
* பெண் வீட்டில் பெரிய அளவில் சொத்து இல்லை என்றாலும் பெண் கை நிறைய சம்பாதிக்க வேண்டும்.
இது போல் இரு தரப்பிலும் பணம், செல்வாக்கு, குதூகலத்திற்குதான் முக்கியத்துவம் தருகிறார்கள். குணம், நல்ல பழக்க வழக்கங்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. இதில் சின்ன பிரச்னை
வந்தாலும் விவாகரத்து செய்துவிடுகிறார்கள். ஒரு சிலர் மறுமணம் செய்து கொள்கிறார்கள். சிலர் தனிமையாக இருந்துவிடுகிறார்கள். இளைய தலைமுறையினர் தங்களின் வாழ்க்கையை நெறிப்படுத்துவது இன்று அவசியமாக உள்ளது. இதன் மூலம் சந்தோஷமான மற்றும் நிம்மதியான மணவாழ்க்கை அமையும்’’ என்றார் கீதா



