ஃபிளை துபாய் விமானத்தை விபத்துக்கு சதி மாலத்தீவு விமானிகள் 2 பேர் கைது

 

ஃபிளை துபாய் விமானத்தை கடத்த முயன்றதாக மாலத்தீவைச் சேர்ந்த 2 விமானிகளை ஐக்கிய அரபு அமீரகம் கைது செய்துள்ளது. துபாயில் இருந்து டெல் அவிவ் சென்ற ஃபிளை துபாய் விமானத்தை கடத்த முயன்றதாக 2 விமானிகள் மீது புகார் எழுந்தது. செப்.30ல் நடுவானில் நடந்த கடத்தல் முயற்சி தொடர்பாக நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் அக்டோபர் 3ம் தேதி காவலில் எடுக்கப்பட்டனர் என்றும் இவர்களின் கைது குறித்து ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள மாலத்தீவு தூதரம் மூலம் அவர்களின் குடும்பத்தினருக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த இரண்டு விமானிகள் கைது குறித்து கருத்து தெரிவிப்பதற்கு மாலத்தீவு அதிகாரிகள் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட 2 விமானிகள் மீதான குற்றச்சாட்டுகள் அல்லது இந்த சம்பவத்தில் அவர்களுக்கு இருக்கக்கூடிய தொடர்பு குறித்த விசாரணை நிலை ஆகியவை குறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகள் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விவரங்களையும் வெளியிடவில்லை.