* கத்தரிக்காய் கூட்டோ, பொரியலோ செய்யும் போது கொஞ்சம் கடலை மாவை தூவி ஐந்து நிமிடம் கழித்து இறக்குங்கள். சுவையாக இருக்கும்.பாத்திரம் வாங்கு பார்
* சப்பாத்தி மாவில் கொஞ்சம் டால்டா கலந்து பிசைந்தால், சப்பாத்தி மென்மையாகவும், ருசியாகவும் இருக்கும்.
* மோர்க்குழம்பு செய்து இறக்கும் போது சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு இறக்கினால் அதன் சுவையே அலாதி.
* பீன்ஸ், பருப்புகளை வேக வைக்கும் போது முதலில் உப்பு போடக் கூடாது. உப்பு போட்டால் இவைகள் வேக அதிக நேரம் பிடிக்கும்.
* பாசிப்பயறு, கொண்டைக் கடலை, சுண்டல் செய்யும் போது தேங்காய் துருவலுடன் சிறிது இஞ்சி துருவல் சேர்த்து தாளித்தால் சுவையாக இருக்கும்.
* கிரேவி வகைகள் செய்யும் போது இரண்டு கரண்டி வேர்க்கடலைத் தூள் கலந்தால் கெட்டியாகவும், சுவையாகவும் இருக்கும்.
* ரசத்திற்கு மிளகு, சீரகம் அரைக்கும் போது அதனுடன் சிறிது கொள்ளு சேர்த்தால் ரசத்தின் சுவை கூடும்.இந்திய உணவு தேடு
* பீன்ஸ், முட்டைக்கோஸ் கூட்டு செய்யும் போது தேங்காய், சீரகம் அரைத்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.
* ஒரு கப் மாவிற்கு, ஒரு ஸ்பூன் வீதம் ரவை கலந்து பூரி செய்தால், பூரி உப்பலாக வரும்.
* மீன் சமைக்கும் போது கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டால் சுவையாக இருப்பதுடன் மீனும் கறுக்காது.
* வெஜிடபிள் சாலட் செய்யும் போது நீர் அதிகமாகிவிட்டால் நான்கு, ஐந்து பிரெட் துண்டுகளை வறுத்து அதில் போட சகஜ நிலைக்கு வந்து விடும்.
* வேகவைத்த கேரட், வறுத்த துவரம் பருப்பு, நான்கு பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு ஆகியவற்றை சேர்த்து சட்னி தயாரித்தால் சுவை அபாரமாக இருக்கும்.நறுமண மசாலா வாங்கு



