ஜிபூட்டியிலிருந்து ஏமன் நோக்கிப் பயணித்த படகு கவிழ்ந்ததில், 15 குழந்தைகள் உட்பட குறைந்தது 109 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதுடன், 116க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 8 மற்றும் 9ஆம் திகதிகளுக்கு இடைப்பட்ட இரவில், ஜிபூட்டியின் ஓபோக் துறைமுக நகருக்கு வடக்கே உள்ள குஹெரே பகுதிக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் 52 ஆண்கள், 42 பெண்கள் மற்றும் 15 குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன், 80க்கும் மேற்பட்டோர் உயிர் பிழைத்துள்ளனர். தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்படுவதுடன், உயிர் பிழைத்தவர்களுக்கு மருத்துவ உதவிகளும் வழங்கப்படுகின்றன.
பொருளாதார வாய்ப்புகளைத் தேடி ஆபத்தான கடல் வழியாகப் பயணிக்கும் புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் அபாயத்தை இச்சம்பவம் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.



