பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் டைட்டில் வின்னர் முத்துக்குமரன் இப்போது ஒரு விஷயத்தில் சிக்கியிருக்கிறார். வஹிதா என்ற பெண்ணை அவர் ஏமாற்றிவிட்டதாக சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. அந்தப் பெண் தற்கொலைக்கும் முயன்று நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துவிட்டார். இந்நிலையில் இன்று அவர் மூன்று வீடியோக்களில் பல விஷயங்களை பேசியிருக்கிறார்.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. தவெகவா இல்லை திமுக, அதிமுகவா என பலரும் கவனத்தை வைத்திருக்கிறார்கள். இதனை பிக்பாஸ் முத்துக்குமரன் கொஞ்சம் விரும்பியிருப்பார். ஏனெனில் நேற்று முழுக்க அவரைத்தான் துவைத்து காயப்போட்டார்கள் நெட்டிசன்கள். இப்போது தன்னை டிஸ்சார்ஜ் செய்துவிட்டார்கள் என்று சந்தோஷப்பட்ட சூழலில்;
வஹிதா மீண்டும் வீடியோக்களை இறக்கியிருக்கிறார். என்ன வீடியோ?: ஏற்கனவே முத்துக்குமரன் தன்னை ஏமாற்றிவிட்டதாக சொல்லி வீடியோ போட்டுவிட்டு தற்கொலைக்கு முயன்றார். அதுகுறித்து கிளாரிட்டி கேட்பதாக முத்துக்குமரன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று வெளியிட்டிருக்கும் வீடியோக்களில், “நேற்றிலிருந்து ஒரு விஷயம் எனக்கு உறுத்துகிறது. வாட்ஸ் அப் காலில் ஒரு மாதிரியும், நார்மல் காலில் ஒரு மாதிரியும் பேசுகிறார். மருத்துவமனையில் எவ்வளவு செலவு ஆனது என்பதெல்லாம் கேட்டார். நீயும், நானும் வீட்டில் பேசினோம் அப்புறம் நீ கிளம்பி போய்விட்டாய் அவ்வளவுதானே நடந்தது என்று சொன்னார். என்னிடமே இவர் இப்படி பேசுகிறாரே என தோன்றியது.
அவரை நான் முதலில் சந்தித்த சமயத்தில் அவர் பிக்பாஸ் வின்னர் என்றெல்லாம் தெரியாது. முதல் சந்திப்பிலேயே அவருடன் இருக்கையில் பாதுகாப்பு இருக்கிறது என்று உருவாக்கினார். திடீரென வீட்டு வாசலில் வந்து நிற்பார். உன்னை பார்க்க வேண்டும் போல் இருப்பதாக சொல்வார். அப்படி மீட் செய்தோம். அப்போது அவர் வீட்டுக்கு அழைத்தார். நான் வரமாட்டேன் என சொன்னேன். அவரை பிடித்திருந்தது: கதவுகளை திறந்து வைத்து: இல்லை உன்னை ஒன்றும் செய்யமாட்டேன் என சொல்லி வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கே சென்றதும் வீட்டு கதவுகளை எல்லாம் திறந்து வைத்துவிட்டார். டிவி பாரு என்று சொல்லிவிட்டு அவர் தூங்கிவிட்டார். நான் சிறிது நேரம் டிவி பார்த்துவிட்டு, கேம் விளையாடினேன். அவர் வீட்டுக்கு வந்து விட்டார்.
எனக்கு உன்னை பிடித்திருக்கிறது என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அப்போதே எனக்கு அவரை பிடித்திருந்தது. எனக்காக இவ்வளவு எஃபர்ட் போடுகிறாரே என தோன்றியது. அப்போதும் விடவில்லை: அவர் என்னிடம் நிறைய பேசுவார். நீ ரொம்ப அப்பாவி என சொல்வார். உனக்கும் எனக்கும் இருக்கும் அந்த வைப் பிடித்திருக்கிறது. நாம் சந்தித்துக்கொள்கையில் ஒரு ஷாக் வருகிறது பார்த்தாயா என்றெல்லாம் பேசுவார். அவர் வீட்டில் ஆல்கஹால் இருந்தது. அவர் எனக்கு ஊற்றியெல்லாம் கொடுத்தார். காலில் முத்தம் கொடுத்து, நெற்றியில் முத்தம் கொடுத்தார். அப்போதும் நான் ரொம்ப நெருக்கமாகிவிட்டேன். வாழைப்பழம் மாதிரி பேசினார். எனக்கு மாதவிடாய் சுழற்சி வந்தபோதுகூட அவர் விடவில்லை” என்றார்.



