மேஷ ராசி அன்பர்களே! இன்று மிக லாபமான காரியங்கள் நடக்கும் நாள். அதிகாரிகளின் அனுசரணை பக்கபலமாக அமையும். வியாபாரத்திற்கு தேவையான நன்மைகள் உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். உறவினர் ஒத்துழைப்பு கிடைக்கும். பதவி உயர்வு உண்டாகும். வேலை திறனால் பரிசுகள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். கோவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை உண்டாகும். மன மகிழ்ச்சி மிகுதியாக இருக்கும். மனக்கவலை தீரும்.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மிதமான யோகம்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலையில் சற்று சிரமம்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காரிய தாமதம்.
இன்று உங்கள் பலம்:
எதிர்ப்புகளைத் தாண்டி வெற்றி பெறுகின்ற வழிகள் அமைத்தல். உங்களுக்கு எதிர்பாராத இடத்திலிருந்து வரும் பணம்.
இன்று உங்கள் பலவீனம்:
வெளியூர் பயணங்களில் சில இடையூறுகள். வேலை இடத்தில் மேல் அதிகாரியின் கோபம்.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:
1 மனைவியை சற்று அனுசரித்து போவது நல்லது.
2 செலவு செய்வதில் எப்போதும் எச்சரிக்கையாக இருக்கவும்.
3 அரசு அதிகாரிகளிடம் பக்குவமாக நடப்பது நல்லது.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல்
வழிபட வேண்டிய தெய்வம் : முருகன்
ரிஷப ராசி அன்பர்களே! மகிழ்ச்சியான தகவல்கள் வரும் நாள். பொருளாதார வசதி பெருகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கள்வர் பயம் விலகும். புதிய தெம்புடன் தொழிலை மேம்படுத்துவீர்கள். புதிய முயற்சிகளில் அபார வெற்றி கிடைக்கும். அந்நியரின் சகாயமும் உண்டாகும். அறிவாளிகளின் ஆதரவு கிடைக்கும். தன லாபங்கள் அதிகரிக்கும். தெய்வபக்தியால் இதர நன்மைகளும் உண்டாகும். மக்கள் பேறு உண்டாகி மழலை சத்தம் கேட்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேன்மை பெறுவார்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உயர்வு அடைவார்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாகன யோகம் உண்டு. இன்று உங்கள் பலம்: வங்கி இருப்பு உயர்ந்து மன உறுதி ஏற்படும். உண்மையான நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று உங்கள் பலவீனம்: அவசரப்பட்டு சில நேரங்களில் வார்த்தையை விட்டு விடுவீர்கள். நேரம் தவறி வீட்டுக்கு வருவதால் சிக்கல் உண்டாகும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வரவுக்கு தகுந்த மாதிரி செலவு செய்தல் நல்லது. 2 கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் நிதானமாக செயல்பட வேண்டும். 3 வேலை இடத்தில் சோம்பேறித்தனம் காட்டக்கூடாது. அதிர்ஷ்ட எண்கள்: 2,9 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு வணங்க வேண்டிய தெய்வம்: விநாயகப் பெருமான்.
மிதுன ராசி அன்பர்களே! ஆசைப்பட்ட அனுகூலங்கள் கிடைக்கும் நாள். கால்நடை யோகம் உண்டாகும். வாகன லாபம் கிடைக்கும். சுகபோகங்கள் ஏற்படும். பொருளாதார லாபங்கள் அதிகரிக்கும். ஆட்சியாளர்களின் ஆதரவும் உண்டாகும். அரசாங்க அதிகாரிகள் உறுதுணை கிட்டும். ஊருக்குள் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பூமி லாபமும் ஏற்படும். தொழிலில் மிகப்பெரிய முன்னேற்றம் காணப்படும். மேற்கிலிருந்து இனிப்பான செய்திகள் வரும். மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யோக பலன்களை பெறுவார்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பதவி உயர்வு அடைவார்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சீரும் சிறப்பு பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: தொழில்நுட்பத்தோடு வியாபாரத்தில் ஈடுபடும் திட்டம் வகுப்பது. பிள்ளைகளுக்கு தேவையான காரியங்களை முன்கூட்டியே செய்வது. இன்று உங்கள் பலவீனம்: நண்பர்களை தட்ட முடியாமல் சில காரியங்களில் ஈடுபடுவது. பண விவகாரங்களை அலட்சியமாக கையாளுவது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 இணையதள மோசடிகளில் கவனமாக இருக்க வேண்டும். 2 அனாவசியமாக பேசி வம்பை விலைக்கு வாங்க வேண்டாம்.. 3 உணவு விஷயத்தில் அலட்சியமாக இருக்கக் கூடாது. அதிர்ஷ்ட எண்: 5 9 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, . வணங்க வேண்டிய தெய்வம்: சமயபுரம் மாரியம்மன்.
கடக ராசி அன்பர்களே! இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். மகான்களின் ஆசி கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு பக்க துணையாக இருக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். தொழிலில் முழு கவனமும் செலுத்தப்படுவதால் எதிர்பாராத லாபம் கிட்டும். தன தானிய லாபங்கள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளால் நன்மை உண்டாகும். வேலை இடத்தில் பதவி உயர்வு தேடி வரும். புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலையில் சிக்கல் உண்டு. பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அலைச்சலில் அவதி. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பண வரவு குறைவு. இன்று உங்கள் பலம்: உங்களின் திறமைக்கு ஏற்ப வேலையில் உயர்வு, சம்பள அதிகரிப்பு. குடும்பத்தினரின் ஒத்துழைப்பு மன தைரியம் கொடுக்கும். இன்று உங்கள் பலவீனம்: உடன் இருப்பவர்களை அளவுக்கு அதிகமாக நம்புவது. செலவு செய்வதில் கவனக்குறைவாக இருப்பது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 பண விஷயத்தில் அலட்சியம் காட்டக்கூடாது. 2 வார்த்தைகளை எந்த இடத்திலும் அளவாக பேச வேண்டும். 3 வேலை இடத்தில் நுட்பமாக இருக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: சோமசுந்தரப் பெருமான்.
சிம்மராசி அன்பர்களே! இன்று யோக பலன்கள் கூடி வரும் நாள். புனித நதிகளில் நீராடும் வாய்ப்புக்கு கிட்டும். குடும்பத்தில் சௌகரியங்கள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்னியோன்யம் ஏற்பட்டு குதூகலம் உண்டாகும். குழந்தைகளும் பெற்றோர்களின் மனம் அறிந்து நடந்து கொள்வார்கள். குலதெய்வத்தின் அருளால் நல்லது நடக்கும். சிவ தரிசனம் கிட்டும். தொழில் ஆதாயங்கள் பெருகும். கையில் தாராளமாக பணப்புழக்கம் ஏற்படும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யோகம் கை கூடி வரும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வியாபார லாபம் பெருகும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சேமலாபங்கள் அதிகரிக்கும். இன்று உங்கள் பலம்: வெளிநாட்டு நண்பரின் உதவி உங்களுக்கு துணையாக இருக்கும். வங்கியில் இருக்கும் பணம் மனத்துணிவை கொடுக்கும். இன்று உங்கள் பலவீனம்: பிள்ளைகளின் போக்கு மனச் சங்கடத்தை உண்டாக்கும். லாபத்தை சேமிப்பாக மாற்றுவதில் சிரமப்படுவீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனம் தேவை. 2 சாலையில் கார் ஓட்டும் போது அக்கம் பக்கம் பார்க்க கூடாது. 3 இரவு நேர பயணங்கள் தேவையில்லாத சிக்கலை ஏற்படுத்தும். அதிர்ஷ்ட எண்: 1,6 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: யோக நரசிம்மர்.
கன்னி ராசி அன்பர்களே! வெற்றிகள் வீடு தேடி வரும் நாள். அரசு உதவிகள் கிடைக்கும். அரசு வேலையில் உங்கள் திறமைக்கேற்ற மரியாதை வந்து சேரும். அதனால் பதவி உயர்வும் ஏற்படும். சிலருக்கு பணி மாறுதல்கள் கிடைக்கலாம். வாகன லாபங்கள் உண்டாகும். மனைவியின் பாசம் மகிழ்ச்சி ஏற்படுத்தும். தனதானிய லாபங்கள் அதிகரிக்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நிலை ஏற்படும். தாய் தந்தையர்கள் ஆசி கிடைக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல பலன் அடைவார்கள். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யோக பலன் பெறுவார்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகன பலன் அடைவார்கள். இன்று உங்கள் பலம்: புதிய தொழிலில் வரும் வருமானம் மனதிற்கு தெம்பை கொடுக்கும். அரசாங்க பெரிய மனிதரின் செல்வாக்கு துணையாய் நிற்கும். இன்று உங்கள் பலவீனம்: சில நேரங்களில் கோபத்தால் நிதானம் தவறுவீர்கள். என்ன செய்கிறோம் என்ற தெரியாத நிலை சிக்கலை கொடுக்கும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 அதிக வட்டிக்கு கடன் வாங்க கூடாது. 2 புதியவர்களிடம் பணப் பொறுப்பை ஒப்படைக்க கூடாது. 3 குடும்பத்தினரிடம் மனதில் இருக்கும் விஷயங்களை மறைக்கக்கூடாது. அதிர்ஷ்ட எண்: 1,9 அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி.
துலாம் ராசி அன்பர்களே! கொஞ்சம் நற்பயன்கள் குறைவாகவே கிடைக்கும் நாள். மின்சார சாதனங்களில் பழுது ஏற்படலாம். வாகனம் ஓட்டுவோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முயற்சிகள் சற்று தாமதமாகவே நடக்கும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். தொழிலில் எதிர்ப்புகள் உருவாகும். வியாபாரத்திற்கு ஏதாவது இடையூறு ஏற்படலாம். அதையும் தாண்டி உங்கள் மதி நுட்பத்தால் நல்ல பலன் அடைவீர்கள். சகோதரர்களால் நன்மை உண்டாகும். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு நன்மைகள் மிதமாக நடக்கும். சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். விசாகம் நட்சத்திரக்காரர்கள் வீட்டுச் செலவுகள் கூடும். இன்று உங்கள் பலம்: வருகின்ற எதிர்ப்புகளை முறியடிக்கின்ற மனதைரியம் உண்டு. லாபத்தை எதிர்பார்க்காமல் உழைக்கின்ற திறன் அதிகம். இன்று உங்கள் பலவீனம்: நீங்கள் சந்திக்க விரும்பும் அரசாங்க நண்பர் வெளியூர் போயிருப்பது. உறவினர்கள் விஷயத்தில் பெரும் போக்காக நடப்பது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 அரசு வேலையில் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 2 கண்டபடி செலவு செய்வதை கட்டாயம் நிறுத்த வேண்டும். 3 அக்கம் பக்கம் பேசுவதை காதில் வாங்க கூடாது. அதிர்ஷ்ட எண்: 6,3 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: பெருமாள்.
விருச்சிக ராசி அன்பர்களே! நினைத்த காரியம் நடக்கும் நாள். இழந்த பொருட்கள் திரும்ப வந்து சேரும். தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். வேலை இடத்தில் உங்கள் திறமையால் பெரும் மதிப்பு ஏற்படும். ஆடை அணிகலன்கள் சேரும். புது வீடு கட்டும் பாக்கியம் அமையும். உடல் வலிமை அதிகரிக்கும். மனைவி மக்கள் பிரியமாக நடந்து கொள்வார்கள். ஆடம்பரமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு சிறப்பான யோக பலன் உண்டு. அனுஷம் நட்சத்திரக்காரர்கள் தன தானிய லாபம் அதிகரிக்கும். கேட்டை நட்சத்திரக்காரர்கள் உயர்வான பலன்கள் வந்து சேரும். இன்று உங்கள் பலம்: புதிய முதலீடுகளை திட்டமிட்டு செய்து வெற்றிகரமாக நடத்துவது. பரிபூரண குலதெய்வ அருள் கிடைப்பது. இன்று உங்கள் பலவீனம்: ஒரு வேகத்தில் பேசி சிக்கலை விலைக்கு வாங்குவது. உறவுகளுக்காக மிதமாக நடந்து கொள்வது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 அரசாங்க காரியத்தை பொறுமையாக கையாள வேண்டும். 2 வரவுக்கு மீறி செலவு செய்யக்கூடாது. 3 மனைவியை புரிந்து கொண்டு நடக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு வெள்ளை வணங்க வேண்டிய தெய்வம்: குன்றக்குடி முருகன்.
விருச்சிக ராசி அன்பர்களே! நினைத்த காரியம் நடக்கும் நாள். இழந்த பொருட்கள் திரும்ப வந்து சேரும். தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். வேலை இடத்தில் உங்கள் திறமையால் பெரும் மதிப்பு ஏற்படும். ஆடை அணிகலன்கள் சேரும். புது வீடு கட்டும் பாக்கியம் அமையும். உடல் வலிமை அதிகரிக்கும். மனைவி மக்கள் பிரியமாக நடந்து கொள்வார்கள். ஆடம்பரமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு சிறப்பான யோக பலன் உண்டு. அனுஷம் நட்சத்திரக்காரர்கள் தன தானிய லாபம் அதிகரிக்கும். கேட்டை நட்சத்திரக்காரர்கள் உயர்வான பலன்கள் வந்து சேரும். இன்று உங்கள் பலம்: புதிய முதலீடுகளை திட்டமிட்டு செய்து வெற்றிகரமாக நடத்துவது. பரிபூரண குலதெய்வ அருள் கிடைப்பது. இன்று உங்கள் பலவீனம்: ஒரு வேகத்தில் பேசி சிக்கலை விலைக்கு வாங்குவது. உறவுகளுக்காக மிதமாக நடந்து கொள்வது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 அரசாங்க காரியத்தை பொறுமையாக கையாள வேண்டும். 2 வரவுக்கு மீறி செலவு செய்யக்கூடாது. 3 மனைவியை புரிந்து கொண்டு நடக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு வெள்ளை வணங்க வேண்டிய தெய்வம்: குன்றக்குடி முருகன்.
தனுசு ராசி அன்பர்களே! இனிப்பான செய்திகள் வந்து சேரும் நாள். தெய்வ தரிசனம் செய்வதற்கு வாய்ப்புகள் ஏற்படும். வெளியூர் பயணத்தில் நன்மைகள் உண்டாகும். அளவுக்கு மீறிய உழைப்பு வருமானத்தை அதிகரிக்கும். விவசாயத்தின் மூலமாக வருமானம் வரும். தன தானிய லாபங்கள் கிட்டும். உறவினர் விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்துடன் கலந்து கொள்ளும் நிலை உண்டாகும். பழைய பாக்கிகள் வசூல் ஆகி கையிருப்பை உயர்த்தும். வியாபாரம் மிக நல்ல முறையில் நடக்கும். மூல நட்சத்திரக்காரர்களுக்கு காரியசித்தி உண்டாகும். பூராட நட்சத்திரக்காரர்கள் தொழில் மேன்மை அடையும். உத்திரம் நட்சத்திரக்காரர்கள் எண்ணியது நிறைவேறும். இன்று உங்கள் பலம்: மனதளவில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். புதிய வேலை முயற்சியில் வெற்றி கிடைக்கும். இன்று உங்கள் பலவீனம்: சட்டென கோபப்பட்டு வார்த்தைகளை அள்ளி வீசுவது. சிறு பிரச்சினையாக இருந்தாலும் பெரிதாக எண்ணி கவலைப்படுவது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 இரவு நேர பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும். 2 ஆடம்பரமாக செலவு செய்வதில் கவனமாக செயல்பட வேண்டும். 3 கால் போன போக்கில் செல்லக்கூடாது. அதிர்ஷ்ட எண்: 3,6 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் கரு நீலம் வணங்க வேண்டிய தெய்வம்: தக்ஷிணாமூர்த்தி
மகர ராசி அன்பர்களே! ஆன்மீகப் பெரியவரின் ஆசி கிடைக்கும் நாள். தொழிலுக்கு ஏற்பட்ட தடைகள் விலகும். உடல் நலம் மேம்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் மறையும். சகோதரர்களுக்கிடையே இருந்த சச்சரவுகள் தீரும். வேலை காரணமாக மனைவி மக்களை பிரிந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படும். அதிகாரிகளின் நட்பு அனுகூலத்தை கொண்டு வரும். அரசியல்வாதிகளின் ஆதரவு தொழிலுக்கு உதவியாக இருக்கும். உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் உத்தியோக உயர்வு அடைவார்கள். திருவோணம் நட்சத்திரக்காரர்கள் யோக பலன் பெறுவார்கள். அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் கல்வியில் சிறப்படைவார்கள். இன்று உங்கள் பலம்: முக்கிய நிகழ்ச்சிகள் நீங்கள் எதிர்பார்த்தபடி முடிவாகும். அரசு அனுகூலங்கள் உங்களைத் தேடி வரும். இன்று உங்கள் பலவீனம்: நெருக்கமானவரே உங்களுக்கு எதிராக இருப்பார். சில விஷயங்களை தவிர்க்க முடியாமல் தடுமாறுவீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 செலவுகளை நிதானமாக செய்ய வேண்டும். 2 உடல் ஆரோக்கியத்தில் அக்கறையாக நடந்து கொள்ள வேண்டும். 3 மனைவியின் உள்ளத்தை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். அதிர்ஷ்ட எண்: 9,2 அதிர்ஷ்ட நிறம்: நீலம் சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: திருநள்ளாறு சனி பகவான்.
கும்ப ராசி அன்பர்களே! மிதமான பலன்கள் நடக்கும் நாள். தொழிலில் அதிகமான கவனத்தை செலுத்த வேண்டும். எந்த காரணம் கொண்டும் கடன் சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது. ஆன்லைன் சூதாட்டங்களில் இறங்க வேண்டாம். வியாபாரம் மந்தமாக நடக்கும். உறவினர்கள் உங்கள் மீது பொறாமைப்படும் நிலை ஏற்படும். கண் திருஷ்டி சில பாதகங்களை கொண்டு வரும். குலதெய்வத்தின் அருளால் மனப் பயம் விலகும். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு வேலையில் சிக்கல் உண்டாகும். சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு தன வரவு தடைபடும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு பதவி உயர்வு தள்ளிப் போகும். இன்று உங்கள் பலம்: உங்களிடம் இணைந்திருக்கும் மனத் தைரியம் எந்த காரியத்திலும் வெற்றி பெற வைக்கும். உதவிகள் தேடி வரும். இன்று உங்கள் பலவீனம்: அவசரப்பட்டு எந்த காரியத்திலும் இறங்கி விடுவீர்கள். உங்களை அறியாமலேயே சில இடையூறுகள் ஏற்படும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வெளியில் போகும் போது வீடு பூட்டி இருக்கிறதா என்று சரி பார்க்க வேண்டும். 2 பிள்ளைகளின் படிப்பில் அக்கறை குறையக்கூடாது. 3 வியாபார நேரத்தில் வெளியே சுற்றுவது கூடாது. அதிர்ஷ்ட எண்: 8,3 அதிர்ஷ்ட நிறம்: கருப்பு, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: குச்சனூர் சனி பகவான்.
மீன ராசி அன்பர்களே! சிறப்புகள் தேடி வரும் நாள். பழைய கவலைகள் நீங்கும். நன்மைகள் பெருகும். வியாபாரத்தில் மிகுந்த லாபம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மரியாதை அதிகரிக்கும். பதவி உயர்வு கிட்டும். சிலருக்கு பதவி மாறுதல் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு. ஆட்சியாளர்கள் மூலம் நன்மை ஏற்படும். மனைவி மக்கள் சந்தோஷமாக இருப்பதால் குடும்பம் குதூகலத்துடன் திகழும். வடக்கு திசையில் இருந்து மிக நல்ல செய்தி உங்களுக்கு வந்து சேரும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு தன வரவு அதிகரிக்கும் . உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் யோக பலன்கள் உண்டாகும். ரேவதி நட்சத்திரக்காரர்கள் காரியங்கள் கைகூடும். இன்று உங்கள் பலம்: நிதானத்தோடும் மதிநுட்பத்தோடும் காரியங்களில் இறங்குவீர்கள். தடைகளை தாண்டக்கூடிய வியூகம் அமைப்பீர்கள். இன்று உங்கள் பலவீனம்: சில நேரங்களில் ஞாபக மறதி பாடாய்படுத்தும். எந்த இடத்தில் பொருளை வைத்தோம் என்று தடுமாறுவீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 அந்நிய பெண்களிடம் நெருக்கமாக உறவாட வேண்டாம். 2 தொலைபேசியில் வரும் ஆசை வார்த்தைகளை நம்ப வேண்டாம். 3 வரவுக்கு மீறி செலவுகள் செய்ய வேண்டாம். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: மதுரை மீனாட்சி அம்மன்.
இன்றைய பஞ்சாங்கம் தேதி 20 – புரட்டாசி – பராபவ வருடம் புதன் நாள் புதன் திதி துவாதசி (up to 11:17 pm) திரயோதசி (up to October 08, 10:16 pm) நட்சத்திரம் மகம் (up to 9:40 pm) பூரம் (up to October 08,9:20 pm) யோகம் சித்த-அமிர்த யோகம் நல்ல நேரம் 9:15 – 10:15 am / 4:45 – 5:45 pm கௌரி நல்ல நேரம் 10:45 – 11:45 am / 6:30 – 7:30 pm இராகு காலம் மதியம் 12.00 – 1.30 எமகண்டம் காலை 7.30 – 9.00 குளிகை காலை 10.30 – 12.00 சூலம் வடக்கு பரிகாரம் பால் சந்திராஷ்டமம் உத்திராடம், திருவோணம் சூரியோதயம் 6:02 AM சூரிய அஸ்தமனம் 5:51 PM சந்திரோதயம் Oct 07 2:51 AM சந்திர அஸ்தமனம் Oct 07 3:36 PM



