மேஷம் முதல் மீனம் வரை- இன்றைய ராசிபலன்-நல்ல நேரம்-அக்டோபர்- 10-2026

 

மேஷ ராசி அன்பர்களே! சிறப்பான காரியங்கள் நடக்கும் நாள். பழக்கவழக்கங்களில் சில மாற்றம் ஏற்படும். தொழில்துறையில் முன்னேற்றம் உண்டாகும். காப்பீட்டு துறையில் ஈடுபாடு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் மறையும். பண வரவு அதிகரிக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். தெற்கு திசையில் இருந்து ஒரு நல்ல செய்தி வரும். உடன் பிறந்தவர்கள் உதவி கிடைக்கும். பண வரவுகளில் தடை நீங்கும். யோக பலன் அதிகரிக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிந்தித்து செயல்படவும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒப்பந்தங்கள் சாதகமாகும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொழில் ஆர்வம் அதிகரிக்கும்.

இன்று உங்கள் பலம்:

உறவினர்கள் மூலம் மாற்றங்கள் கிடைக்கும். புதிய தன்னம்பிக்கை பிறக்கும்.

இன்று உங்கள் பலவீனம்:

விமர்சன பேச்சுக்களால் செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். சிற்றின்ப செயல்பாடுகளில் ஆர்வம் கூடும்.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:

1 பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

2 மனைவியின் தேவைக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும்.

3 அலுவலகங்களில் கவனம் சிதறக் கூடாது.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல்

வழிபட வேண்டிய தெய்வம் : முருகன்

ரிஷப ராசி அன்பர்களே! சிறப்பான செய்திகள் வந்து சேரும் நாள். வீட்டு தேவைகள் பூர்த்தி செய்யப்படும். பூர்வீக சொத்து கைக்கு வரும். இழுபறியாக இருந்த விற்பனை அதிகரிக்கும். சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். தந்தை வழி இலாபகரமான சூழ்நிலை உருவாகும். வியாபாரம் மேன்மையாக நடக்கும். தொழில்துறையிலிருந்து எதிர்ப்புகள் நீங்கும். பணவரவு அதிகரிக்கும். சீட்டு போடுவதன் மூலம் பெரிய தொகை கிடைக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெற்றி பெறுவார்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பு அடைவார்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தனலாபம் அதிகரிக்கும். இன்று உங்கள் பலம்: தொழிலை மேம்படுத்துவதற்கான திட்டங்களை தீட்டுவீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சிறப்பாக அமையும். இன்று உங்கள் பலவீனம்: எதிலும் ஒரு பற்றற்ற நிலை இருக்கும். தொழிலை கவனிக்க முடியாத தடுமாற்றம் ஏற்படும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 செலவுகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும். 2 பணம் கொடுத்து வாங்குவதில் எச்சரிக்கை தேவை. 3 அலுவலகத்தில் நுட்பமாக வேலை பார்க்க வேண்டும். அதிர்ஷ்ட எண்கள்: 2,9 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு வணங்க வேண்டிய தெய்வம்: விநாயகப் பெருமான்.

மிதுன ராசி அன்பர்களே! லாபங்கள் அதிகரிக்கும் நாள். வேலை உயர்வு தொடர்பான செய்தி கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு. வருமானம் அதிகரிக்கும். சேமிப்புகளை மேம்படுத்துவீர்கள். கடன் பிரச்சினைகள் குறையும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். சுப காரியம் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும். குழந்தைகளின் எதிர்கால விஷயங்களில் கவனம் அதிகரிக்கும். பண வரவு தேவைக்கேற்ப வந்து சேரும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மக்கள் செல்வம் பெறுவார்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உயர்ந்த பலன் அடைவார்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நிம்மதியுடன் பணி செய்வர். இன்று உங்கள் பலம்: வேலை பார்க்கும் இடத்தில் உங்களுக்கு சாதகமான பலன் அமையும். இடமாற்றம் பதவி உயர்வு ஏற்படலாம். இன்று உங்கள் பலவீனம்: சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்ல முடியாத நிலை. குடும்ப விஷயங்களை வெளிப்படையாக பேசுவது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 ஆன்லைன் வர்த்தகத்தில் கவனமாக இருக்க வேண்டும். 2 பக்கத்து வீட்டுகாரர்களின் விஷயத்தில் தள்ளி இருப்பது நல்லது. 3 வேலை அதிகம் இருந்தாலும் சாப்பிட மறக்கக்கூடாது. அதிர்ஷ்ட எண்: 5 9 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, . வணங்க வேண்டிய தெய்வம்: சமயபுரம் மாரியம்மன்.

கடக ராசி அன்பர்களே! நினைத்தது நடக்கும் நாள். இன்று தனதானிய லாபம் அதிகரிக்கும். தொழிலில் புதிய முயற்சியால் வருமானம் பெருகும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் மறையும். வங்கியில் கையிருப்பு உயரும். வேலை இடத்தில் மரியாதை கூடும். அரசு வேலையில் எதிர்பார்த்த நன்மை உண்டாக்கும். வடக்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடு நடக்கும். சேபலாபங்கள் அதிகரிக்கும். புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலை உயர்வு பெறுவார்கள். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களில் நன்மை அடைவார்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தனவரவு தாராளமாக இருக்கும். இன்று உங்கள் பலம்: வரவுகளில் எதிர்பாராத திருப்பங்கள் உண்டாகி கையிருப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பு கூடும். இன்று உங்கள் பலவீனம்: உங்கள் வளர்ச்சி பிடிக்காத உறவினர்கள் புறம் பேசுவார்கள். உடன் இருப்பவர்கள் பற்றி தெளிவில்லாமல் இருப்பது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. 2 அனாவசியமான வார்த்தைகளை அள்ளி வீசக்கூடாது. 3 மேலதிகாரி கருத்துக்கு மாறி நடக்கக் கூடாது. அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: சோமசுந்தரப் பெருமான்.

சிம்மராசி அன்பர்களே! விரும்பிய நிகழ்ச்சிகள் நடக்கும் நாள் இன்று. உங்களின் நன்மதிப்பு அதிகரிக்கும். வேலை பார்க்கும் இடத்தில் சிறப்பு சேரும். பதவி உயர்வு உண்டாகும். சம்பள அதிகரிப்பு ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் வந்து சேரும். வியாபாரத்திலிருந்து எதிர்ப்புகள் மறைந்து போகும். கண் திருஷ்டி சம்பந்தப்பட்ட பாதிப்பு விலகும். குலதெய்வத்தினுடைய அருள் கிட்டும். தெற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வரும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காரிய தாமதம் அடைவார். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலைப்பளு அதிகரிக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆரோக்கிய குறைவு உண்டாகும். இன்று உங்கள் பலம்: புதுவிதமான கண்ணோட்டத்தை உருவாக்கி நினைத்ததை முடிப்பீர்கள். முனைப்போடு செயல்களில் இறங்குவீர்கள். இன்று உங்கள் பலவீனம்: குடும்பத்தில் ஏற்படும் குழப்பம் சோர்வை உண்டாக்கும். பிள்ளைகளும் சில பிரச்சனைகளை கொண்டு வருவார்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வேலையாட்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 2 ஆன்லைன் வர்த்தகங்களில் கவனம் தேவை. 3 வாகனங்களில் போகும்போது மனச்சிதைவு கூடாது. அதிர்ஷ்ட எண்: 1,6 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: யோக நரசிம்மர்.

கன்னி ராசி அன்பர்களே! மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் நாள். சொந்த ஊரில் மதிப்பு உயரும். நவீன தொழில்நுட்ப செயல்களில் வியாபாரத்தை அதிகரிப்பீர்கள். முதலாளியிடம் சிறு கருத்து வேறுபாடு தோன்றி மறையும். எதிர்ப்புகளால் வந்த இன்னல்கள் குறையும். தன வரவு போதுமான அளவுக்கு இருக்கும். செலவுகள் அதிகரித்தாலும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். எதிரிகளாக இருந்தவர்கள் நண்பர்களாக மாறுவார்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆதாயம் பெறுவார்கள். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தன லாபம் அடைவார்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெருமை பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: எதிரிகளாக இருந்தவர்கள் நண்பர்களாக மாறுவார்கள். அரசாங்க உதவி தேடி வரும். இன்று உங்கள் பலவீனம்: வேலை இடத்தில் சில நேரங்களில் நிதானம் தவறுவீர்கள். ஞாபக மறதியும் சிரமங்களை கொடுக்கும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வரவு செலவு கணக்கு எழுதி வைக்க வேண்டும். 2 வேலைக்கு தாமதமாக செல்வதை தவிர்க்க வேண்டும். 3 வெளியில் உள்ள கோபத்தை வீட்டில் காட்டக் கூடாது. அதிர்ஷ்ட எண்: 1,9 அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி.

துலாம் ராசி அன்பர்களே! திட்டமிட்ட காரியங்கள் நடக்கும் நாள். மனதளவில் தன்னம்பிக்கை ஏற்படும். நீண்ட தூர பயணங்கள் அனுகூலத்தை கொண்டு வரும். தொழிலில் எதிர்பாராத லாபம் உண்டாகும். வியாபாரத்தில் சிறப்பான உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரித்து கையிருப்பு கூடும். வேலை இடத்தில் வேண்டிய பலனை அடைவீர்கள். உங்கள் வார்த்தைக்கு மரியாதை இருக்கும். இறைவன் அருளால் நல்லது நடக்கும். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும். சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு பதவி உயர்வு வந்து சேரும். விசாகம் நட்சத்திரக்காரர்கள் தானிய லாபம் அதிகரிக்கும். இன்று உங்கள் பலம்: தொழில் பேச்சுவார்த்தை நல்லபடியாக முடியும். ஊருக்குள் உங்களின் பேச்சுக்கு தனி மரியாதை உண்டு. இன்று உங்கள் பலவீனம்: நீங்கள் எதிர்பார்த்த முக்கிய செய்தி வர தாமதமாகும். நண்பர்களும் சில நேரம் புரிந்து நடக்க மாட்டார்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 தேக ஆரோக்கியத்தில் அக்கறையாக இருக்க வேண்டும். 2 அனாவசியமான செலவுகளை குறைக்க வேண்டும். 3 மற்றவர்களின் பேச்சை காதில் வாங்க கூடாது. அதிர்ஷ்ட எண்: 6,3 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: பெருமாள்.

விருச்சிக ராசி அன்பர்களே! வியாபாரம் மந்தமாக நடக்கும். தொழில்துறையில் இடையூறுகள் தோன்றும். வெளியிலிருந்து எதிர்பார்த்த செய்தி தாமதமாகும். வியாபாரத்திற்கு மறைமுக எதிர்ப்பு இருக்கும். யோக பலன்கள் தாமதமாக கிடைக்கும். தன தானிய சேர்க்கை உண்டாகும். வேலை இடத்தில் சில சிரமங்கள் உருவாகும். மேலதிகாரிகளின் கோபம் மன சஞ்சலத்தை கொடுக்கும். குலதெய்வத்தின் அருளால் குறைகள் தீரும்.

விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு மந்தமான பலன் ஏற்படும்.

அனுஷம் நட்சத்திரக்காரர்கள் தன செலவுகள் கூடும்.

கேட்டை நட்சத்திரக்காரர்கள் அரசு உதவி தாமதமாகும்.

இன்று உங்கள் பலம்:

தொழில் ஏற்பட்ட போட்டிகளை முறியடிக்கும் திட்டம் வகுப்பீர்கள். தடைகளைத் தாண்டி செல்லும் மன தைரியம் உருவாகும்.

இன்று உங்கள் பலவீனம்:

உத்தியோகம் பார்க்கும் இடத்தில் மறைமுக தடைகள் ஏற்படும். எதிர்பாராத செலவுகள் வரும்.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:

1 முயற்சிகளில் மனச்சோர்வு கூடாது.

2 பெரிய மனிதர்களிடம் மிக கவனமாக வார்த்தைகளை பேச வேண்டும்.

3 உறவினர்கள் பேச்சுக்களை மனதில் வைத்துக் கொள்ளக்கூடாது.

அதிர்ஷ்ட எண்: 8,5

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு வெள்ளை

வணங்க வேண்டிய தெய்வம்: குன்றக்குடி முருகன்.
தனுசு ராசி அன்பர்களே! நன்மைகள் வீடு தேடி வரும் நாள். வியூகம் அமைத்து தொழில் வெற்றி வருவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் புகுத்தப்படும். வேலையில் இருப்பவர்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். பூர்வீக சொத்து கைக்கு வந்து சேரும். மின்சாதன பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்ப்புகளை சாதகமாக மாற்றும் சிந்தனை உண்டு. கிழக்கு திசையில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

மூல நட்சத்திரக்காரர்களுக்கு தனலாபம் அதிகரிக்கும்.

பூராட நட்சத்திரக்காரர்கள் தொழில் வெற்றி கிடைக்கும்.

உத்திரம் நட்சத்திரக்காரர்கள் நினைத்தது நடக்கும்.

இன்று உங்கள் பலம்:

மன உறுதியுடன் எந்த காரியத்தையும் செய்வீர்கள். வேலையில் திறமை வெளிப்பட்டு பெருமை அதிகரிக்கும்.

இன்று உங்கள் பலவீனம்:

வீட்டுக்கு குழப்பத்தால் மனம் பலவீனப்படும். எதிர்பார்த்த ஒரு காரியம் தள்ளிப் போகும்.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:

1 இரவு நேரத்தில் வெளியிடங்களில் தங்க வேண்டாம்.

2 அந்நிய பெண்களிடம் அளவோடு பழக வேண்டும்.

3 ஆடம்பரமாக செலவு செய்வது பணத்திற்கு கேடாகும்.

அதிர்ஷ்ட எண்: 3,6

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் கரு நீலம்

வணங்க வேண்டிய தெய்வம்: தக்ஷிணாமூர்த்தி

மகர ராசி அன்பர்களே! அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும் நாள். தொழிலில் எதிர்பாராத லாபம் கிட்டும். வியாபாரத்தில் வாய்ப்புகள் குவியும். வெளிவட்டார செல்வாக்கு அதிகரிக்கும். குலதெய்வத்தில் அருள் பரிபூரணமாக இருக்கும். பதவி உயர்வு உண்டாகும். சம்பளம் அதிகரிக்க பேச்சுவார்த்தை நடக்கும். பணி மாறுதலும் கிடைக்கும். தன தானிய விருத்தி உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் பண வசதி அதிகரிக்கும். திருவோணம் நட்சத்திரக்காரர்கள் தானிய யோகம் அடைவார்கள். அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் காரிய வெற்றி பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: உங்களுக்கு வரவேண்டிய பணம் இப்பொழுது கிடைக்கும். நெருங்கிய நண்பரின் ஆதரவு உண்டு. இன்று உங்கள் பலவீனம்: சில நேரங்களில் செலவுகள் கை மீறிப் போகும். வீட்டில் உங்கள் மனதை புரிந்து கொள்ள மாட்டார்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 பண விஷயத்தில் எல்லோரிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 2 புதிய முதலீடுகளில் கவனம் தேவை. 3 வெளியூர் பயணத்தில் பணம் பொருள் பாதுகாப்பு முக்கியம். அதிர்ஷ்ட எண்: 9,2 அதிர்ஷ்ட நிறம்: நீலம் சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: திருநள்ளாறு சனி பகவான்.

கும்ப ராசி அன்பர்களே! வெற்றிகரமான செய்திகள் கிடைக்கும் நாள். வீடு கட்டும் பணிகள் தொடங்கப்படும். பூர்வீக சொத்துக்கள் வந்து சேரும். தொழிலில் சிறப்பான லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நினைத்ததை தாண்டி வருமானம் அதிகரிக்கும். கையிருப்பு கூடும். பணவரவு தாராளமாக இருக்கும். வேலை இடத்தில் சிக்கல்கள் மறையும். விரும்பிய இடத்துக்கு மாறுதல் கிடைக்கும். தெற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு வேலை உயர்வு உண்டாகும். சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு தன வரவு அதிகரிக்கும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு ஆபரணச் சேர்க்கை ஏற்படும். இன்று உங்கள் பலம்: வருவது வரட்டும் என்று எந்த காரியத்திலும் இறங்குவீர்கள். அரசு உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். இன்று உங்கள் பலவீனம்: சில நேரங்களில் படபடப்பாக பேசுவீர்கள். எது சரி எது தவறு என்று நண்பர்களிடம் ஆய்வு செய்ய மாட்டீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வேலை செய்யும் இடத்தில் விவகாரம் செய்யக்கூடாது. 2 மனைவி பேச்சை காது கொடுத்து கேட்க வேண்டும். 3 அன்றைய வேலையை அன்றே முடிக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 8,3 அதிர்ஷ்ட நிறம்: கருப்பு, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: குச்சனூர் சனி பகவான்.

மீன ராசி அன்பர்களே! சற்று மிதமான பலம் நடக்கும் நாள். எதிர்பாராத செலவுகள் வந்து சேரும். குடும்பச் செலவுக்கு கடன் வாங்கும் நிலை ஏற்படும். தொழில் சற்று மந்தமாக நடக்கும். வியாபாரத்தில் சின்ன சின்ன சிக்கல் உருவாகும். கொடுக்கல் வாங்கல் பிரச்சனை மனதை சிரமப்படுத்தும். வீட்டில் மனைவியின் கோபம் மனதை காயப்படுத்தும். அவசியத்திற்கு கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். உறவினர்களின் எதிர்ப்பு சிரமப்படுத்தும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு காரியத்தடை ஏற்படும் . உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் வருமானம் குறையலாம். ரேவதி நட்சத்திரக்காரர்கள் உதவிகள் தாமதமாகும். இன்று உங்கள் பலம்: தடைகள் வந்தாலும் போராடி வெற்றி கொள்ளும் மனத்தின்மை. சாதுரிமான பேச்சால் காரியம் சாதிக்கும் திறமை. இன்று உங்கள் பலவீனம்: வேலை இடத்தில் தேவையில்லாத பிரச்சனை மனசை வாட்டும். உங்களின் செயல்பாடுகள் விமர்சிக்கப்படும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 கண்ட இடத்தில் பணத்தை வைக்காதீர்கள். 2 ஆன்லைன் சூதாட்டங்கள் அறவே கூடாது. 3 செலவுகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: மதுரை மீனாட்சி அம்மன்.

இன்றைய பஞ்சாங்கம் தேதி 23 – புரட்டாசி – பராபவ வருடம் சனி நாள் சனி திதி அமாவாசை (up to 9:20 pm) பிரதமை (up to October 11, 9:31 pm) நட்சத்திரம் அஸ்தம் (up to 9:42 pm) சித்திரை (up to October 11,10:32 pm) யோகம் சித்த யோகம் நல்ல நேரம் 10:45 – 11:45 am / 4:45 – 5:45 pm கௌரி நல்ல நேரம் 10:45 – 11:45 am / 9:30 – 10:30 pm இராகு காலம் காலை 9.00 – 10.30 எமகண்டம் மதியம் 1.30 – 3.00 குளிகை காலை 6.00 – 7.30 சூலம் கிழக்கு பரிகாரம் தயிர் சந்திராஷ்டமம் சதயம், பூரட்டாதி சூரியோதயம் 6:02 AM சூரிய அஸ்தமனம் 5:49 PM சந்திரோதயம் Oct 10 5:27 AM சந்திர அஸ்தமனம் Oct 10 5:33 PM