மேஷம்: நேர்கொண்ட பார்வையுடன் சில முடிவுகள் எடுப்பீர். பிரபலங்கள் உதவுவர். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் பணியாட்கள் ஆதரவு தருவர். அலுவலகத்தில்யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்.
ரிஷபம்: நினைத்தது நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவர். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர் யார் என்பதை கண்டறிவீர். யாருக்கும் எந்த உறுதிமொழியும் தராதீர். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பர்.
மிதுனம்: மகனின் படிப்பு, மகளின் திருமணம் என்று அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். வியாபாரத்தில் நிதானம் தேவை. பங்குதாரர்களின் ஆலோசனை களைக் கேட்டு செயல்படவும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும்.
கடகம்: புது வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து யோசிப்பீர். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்து தொடர்பான வழக்கில் சாதகமான தீர்வு கிட்டும். வியாபாரத்தில் போட்டிகள் விலகும். ஓரளவு லாபம் உண்டு. அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.
சிம்மம்: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். வியாபாரத்துக்காக புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும். மேலதிகாரி பாராட்டுவார்.
கன்னி: தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர். வியாபாரத்தில் இருந்த அலைச்சல், டென்ஷன் விலகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நன்மை தரும்.
துலாம்: திட்டமிட்ட வேலைகளை போராடி முடிக்க வேண்டி வரும். மகளின் திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் இருக்கும். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். வியாபாரம் லாபம் கிட்டும்.
விருச்சிகம்: இங்கிதமானப் பேச்சால் எல்லோரையும் கவரு வீர்கள். தோற்றப் பொலிவு கூடும். பிள்ளைகள் நம்பிக்கை தருவர். அலுவலக ரீதியான பயணத்தால் ஆதாயம் உண்டு. தொழிலில் போட்டிகள் குறையும். பங்குதாரர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவும்.
தனுசு: தள்ளிப் போய்கொண்டிருந்த சுபகாரியங்கள் கை கூடி வரும். பணவரவால் வீடு, வாகனத்தை மாற்றுவீர். தந்தைவழி சொத்துகள் கிடைக்க வாய்ப்புண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உதவிகரமாக செயல்படுவர். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
மகரம்: முக்கிய முடிவுகளை கவனமாக எடுக்கவும். வீட்டு பெரியவர் களின் ஆலோசனைகளைக் கேட்டு செயல்படுவது நல்லது. வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.
கும்பம்: குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வீர். பிள்ளைகளால் பெருமையடைவீர். பூர்வீக சொத்து வழக்கில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிட்டும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.
மீனம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர். மனைவி வழி உறவினர்களால் செலவு வரும். நண்பர்கள் உதவியுடன் புது வேலை கிட்டும். அலுவலக ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு.



