மேஷம் முதல் மீனம் வரை- இன்றைய ராசிபலன்-நல்ல நேரம்- 22-ஆகஸ்ட் 2026

 

மேஷம்: சாணக்கியத்தனமாகப் பேசி காரியம் சாதிப்பீர். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பணத்தை திருப்பி தருவர். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். பங்குதாரரின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ளவும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்.

ரிஷபம்: பிள்ளைகளால் விரயச் செலவுகள் வரக்கூடும். பேச்சில் கவனம் தேவை. பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரரீதியாக பிரபலங்களை சந்திப்பீர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. பணிச்சுமை கூடும்.

மிதுனம்: திடீர் பணவரவு, செல்வாக்கு உண்டு. மனதில் இருந்த பயம் விலகும். பழுதான வாகனம் சீராகும். சிலர் புது வாகனம் வாங்குவீர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களைக் கவுருவீர்.

கடகம்: சகோதர வகையில் உதவி கிட்டும். விரும்பிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்டவற்றை விற்க முயற்சிப்பீர். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீட்டை அழகுப்படுத்துவீர். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

சிம்மம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பார்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர்.

கன்னி: எதிர்பாராத பணவரவால் மனமகிழ்ச்சியுண்டு. உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவர். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர்கள். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.

துலாம்: பழைய நல்ல நினைவுகளில் மூழ்குவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். ஓரளவு லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

விருச்சிகம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் இருக்கும். பூர்வீக சொத்து வழக்கில் நல்ல தீர்வு கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும்.

தனுசு: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் பிடிவாதம் குறைந்து உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பர். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவரும் முயற்சியில் இறங்குவீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

மகரம்: பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர். சொந்த ஊர் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். சகோதரர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். அலுவலகத்தில் அடுத்தவர் பிரச்சினையில் ஈடுபடுவதை தவிர்ப்பீர். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் தரும்.

கும்பம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர். மனதுக்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். பொறுப்பு கூடும்.

மீனம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குழப்பம் நீங்கி குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உறவினர், நண்பர்களால் மனநிம்மதி கிட்டும். வியாபாரத்தில் பழைய பாக்கியை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.

ஆவணி 05 | சனிக்கிழமை

திதி: தசமி பின்னிரவு 2.01 வரை. பிறகு ஏகாதசி.

நட்சத்திரம்: கேட்டை மதியம் 2.49 வரை. பிறகு மூலம்.

நாமயோகம்: விஷ்கம்பம் நாள் முழுவதும்.

நாமகரணம்: தைதுலம் நண்பகல் 12.49 வரை. பிறகு கரசை.

நல்ல நேரம்: காலை 7-8, 10.30-12, மாலை 5-7, இரவு 9-10.

யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.

சந்திராஷ்டமம்: கார்த்திகை பிற்பகல் 2.49 வரை. பிறகு ரோகிணி.

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57.

அஸ்தமனம்: மாலை 6.26.

ராகு காலம்: காலை 9.00-10.30

எமகண்டம்: மதியம் 1.30-3.00

குளிகை: காலை 6.00-7.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 4

பரிகாரம்: தயிர்