உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் பொதுமக்கள் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தும் 35 வயது இளைஞர் ஒருவர் 43வது மாடியில் இருந்து திடீரென்று கீழே குதித்தார். மேலிருந்து கீழே விழுந்த அதிர்ச்சியில் அவரது உடல் இரண்டு துண்டாகி இறந்தார். இதன் பின்னணியில் உள்ள சோகமான தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஹரியானாவின் மானேசர் பகுதியை சேர்ந்தவர் சாம்பவ் ஜெயின் (வயது 35). இவர் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவிற்கு சென்றார். அங்குள்ள தனியார் லாட்ஜில் தங்கியிருந்தார்
லாட்ஜியில் நேற்று ரூம் எடுத்த சாம்பவ் ஜெயின் இன்று மதியம் காலி செய்வதாக தெரிவித்து இருந்தார். ஆனால் இன்று காலையில் 43வது மாடியில் நின்ற சாம்பவ் ஜெயின் திடீரென்று விபரீத முடிவை எடுத்தார். 43வது மாடியின் பால்கனியில் நின்ற அவர் திடீரென்று வெளியே குதிக்க இறங்கினார். இதை கவனித்ததும் அங்கிருந்தவர்கள் அவரது கையை பிடித்து இழுத்து காப்பாற்ற முயன்றனர். அவரை சமாதானம் செய்தனர். ஆனால் அவர் கேட்கவில்லை. அதேபோல் கட்டடத்தின் கீழிருந்து பார்த்தவர்கள்
வேண்டாம் … வேண்டாம்.. என்று கூச்சலிட்டனர். ஆனால் அதனை சாம்பவ் ஜெயின் கேட்கவில்லை. 43வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவர் தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். அதுமட்டுமின்றி உயரமான கட்டத்தில் இருந்து அவர் கீழே குதித்ததால் உடல் இரண்டு துண்டாகிபோனது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுபற்றி போலீசார் கூறுகையில், ”சாம்பவ் ஜெயின் நேற்று லாட்ஜியில் தங்கினார். இன்று மதியம் வரை அங்கு தங்குவதாக இருந்தது.
ஆனால் அவர் 43வது மாடியின் பால்கனியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துள்ளார். தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் தனது தந்தைக்கு பலமுறை போன் செய்துள்ளார். எதற்காக தந்தைக்கு போன் செய்தார்? தற்கொலை செய்தார்? என்பது தெரியவில்லை. இதுபற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்று கூறியுள்ளனர். முதற்கட்ட தகவலின்படி சாம்பவ் ஜெயின் நிதி நெருக்கடியில் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதான் அவரது தற்கொலை முடிவுக்கு காரணமாக இருக்க என்று போலீசார் நினைக்கின்றனர். அதுபற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



