சிம்பாப்வேயின் மரோண்டேரா கிராமப்புற பகுதியில் புதன்கிழமை (30) மாலை இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில், அதில் பயணித்த 06 பேரும் உயிரிழந்துள்ளனர்.
விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரில் சிம்பாப்வேயின் முன்னணி வர்த்தகரும் பிரபல கோடீஸ்வரருமான விக்னெல் சிவால்கோவும் பயணித்துள்ளார்.
அவருடன் அவரது மனைவி லூசி முடெகே, இரண்டு விமானிகள் மற்றும் மேலும் இரண்டு பயணிகள் என மொத்தம் 06 பேர் ஹெலிகொப்டரில் பயணித்திருந்த நிலையில், அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
காந்தாமி பகுதியில் அமைந்துள்ள தங்களது கிராமத்து வீட்டின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டுவிட்டு திரும்பியபோது, புறப்பட்ட சுமார் 40 நிமிடங்களில் மரோண்டேராவில் உள்ள குடெங்கா பண்ணைக்கு அருகில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் சிம்பாப்வே பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



