வேலூர் மாவட்ட காட்பாடிசேகர் ரெட்டி வீட்டில் 5 கிலோ தங்கம் அபேஸ்! தாய் -மகள் என இரண்டு ராணிள் கைது

 

 

 

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் கடந்த ஆறு மாதமாக 5 கிலோ தங்கம் 65 லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே வீட்டில் வேலை செய்யும் தாய் -மகள் என இரண்டு பேரை போலீசார் கைது

செய்துள்ள நிலையில், மூன்று பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர். கடந்த ஆறு மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக 5 கிலோ நகைகளை கொள்ளையடித்திருக்கிறது அந்த கும்பல் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரை சேர்ந்தவர் பிரபல தொழிலதிபதிபர் சேகர் ரெட்டி. இவர் சென்னையிலும் திருப்பதியிலும் வசிப்பதால் அவ்வப்போது காட்பாடியில் உள்ள இல்லத்திற்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் இவரது மகளுக்கு சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதற்கான தனது சொந்த பணியில் கடந்த 5 மாதமாக இவரது குடும்பத்தார் சென்னையில் மும்முறமாக இருந்துள்ளார். இந்நிலையில் இவரது காட்பாடி வீட்டில் வைத்திருந்த நகைகள் மற்றும் ரொக்கம் மாயமானதாக சேகர் ரெட்டியின் மேலாளர் சந்திரசேகர் என்பவர் விருதம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விருதம்பட்டு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும், வீட்டில் வேலை செய்பவர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவரது வீட்டிலேயே 10 ஆண்டுகளுக்கு மேலாக சமையல் பணி செய்யும் ஊசூர் அடுத்த அத்தியூரைச் சேர்ந்த ராணி ( 52), இரண்டு ஆண்டுகளாக வேலை செய்யும் அவரது மகள் மகாலட்சுமி (37) ஆகிய இருவர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதனை அடுத்து இவர்களை கைது செய்து தற்போதைக்கு இவர்களிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் ரொக்க பணம், 3 சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்ததாகவும். இந்நிலையில் இருவரை நீதிமன்ற காவலில் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக மூன்று பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் தலைமறைவாக உள்ள ஒருவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

தொழிலதிபர் சேகர் ரெட்டியின் மகள் திருமணத்தில் சேகர் ரெட்டி குடும்பத்தார் மும்முரமாக சென்னையில் இருந்த போது, இவரது வீட்டில் பணியாற்றி வரும் தாய் மற்றும் மகள் இருவரும் கடந்த ஆறு மாதமாக கொஞ்சம் கொஞ்சமாக யருக்கும் தெரியாமல் பணம் மற்றும் நகைகளை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இவர்கள் சுமார் ஐந்து கிலோவிற்கும் மேல் தங்க நகைகள் மற்றும் 65 லட்சம் பணம் திருடப்பட்டு இருப்பதாக போலீஸ் வட்டாரத்தில் கூறப்படும் நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.