மிடில் கிளாஸ் மக்களை மூச்சுமுட்ட வைக்கும் பள்ளிக் கட்டணம்.. வழிகாட்டிய ‘கருணாநிதி’ மாடல்!

 

தமிழ்நாட்டில் ஒவ்வொரு கல்வியாண்டு தொடங்கும்போதும் நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களுக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுப்பது தனியார் பள்ளிகளின் கட்டண உயர்வுதான். கல்வி என்பது அத்தியாவசியத் தேவையாகிவிட்ட நிலையில், சேர்க்கைக் கட்டணம், சீருடை, புத்தகங்கள், ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் வளர்ச்சி நிதிகள் எனப் பல்வேறு பெயர்களில் தனியார் நிர்வாகங்கள் வசூளிக்கும் மறைமுகக் கட்டணங்கள் பெற்றோர் தலையில் பெரும் சுமையாகக் படிகின்றன. இத்தகைய தடையற்ற கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்தி, சாமானிய மக்களும் தரமான கல்வியைப் பெற வழிவகை செய்ய வேண்டிய அவசியம் தொடர்ந்து நிலவி வருகிறது.

இந்தியாவிலேயே முதன்முறையாகத் தனியார் சுயநிதிப் பள்ளிகளின் கட்டணத்தை முறைப்படுத்துவதற்காகச் சிறப்புச் சட்டத்தைக் கொண்டு வந்த பெருமை மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி தலைமையிலான அரசுக்குச் சேரும். 2009-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (கட்டண முறைப்படுத்துதல்) சட்டம்’மூலம், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ‘பள்ளிக் கட்டண நிர்ணயக் குழு’ அமைக்கப்பட்டது. இக்குழுவின் மூலம் ஒவ்வொரு தனியார் பள்ளியும் வசூலிக்க வேண்டிய கட்டண வரம்பை அரசே நிர்ணயம் செய்யும் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.பயண வழிகாட்டிகளைப் படி

இந்த ‘கருணாநிதி மாடல்’ சட்டத்தின்படி, பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்களின் ஊதியம் மற்றும் பராமரிப்புச் செலவுகளை ஆய்வு செய்து 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட கட்டணத்தை விடக் கூடுதலாக வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், அங்கீகாரத்தை ரத்து செய்யவும் சட்டத்தில் இடமுள்ளது. இதன் தொடர்ச்சியாக, தற்போதும் பள்ளிக் கல்வித்துறை மூலம் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விவரங்களை இணையதளத்திலும், பள்ளிகளின் அறிவிப்புப் பலகையிலும் வெளிப்படையாகக் காட்சிப்படுத்த உத்தரவிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

கல்வியை வணிகமயமாக்கலில் இருந்து மீட்கவும், நடுத்தரக் குடும்பங்களின் நிதிப் சுமையைக் குறைக்கவும் வழிவகுத்த இச்சட்டம், இன்றளவும் நாட்டின் பிற மாநிலங்களுக்கு ஒரு முன்னோடி மாதிரியாகக் கருதப்படுகிறது. அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதோடு நின்றுவிடாமல், தனியார் கல்வி நிறுவனங்களின் தன்னிச்சையான செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் இத்தகைய தொலைநோக்குப் பார்வை கொண்ட கொள்கைகளே, தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை இந்திய அளவில் முன்னணியில் வைத்திருக்க முதன்மைக் காரணமாக அமைந்துள்ளன.