நிர்வாண கோலத்தில்.வீரமணி. சிசிடிவியில் சிக்கிய காட்சி! தேனாம்பேட்டை பங்களாவில்

 

வீரமணி ஒரு சிறுமியுடன் நிர்வாணமாக நிலையில் இருப்பதாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை தந்து வருகின்றன.. சென்னை தேனாம்பேட்டை பங்களாவில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானதாகக் கூறப்படும் இந்த வீடியோதான் இப்போது ஜெம் வீரமணி வழக்கில் மிகப்பெரிய டர்னிங் பாயிண்ட்டாக மாறியுள்ளது.

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் வீரமணி மீது கடந்த 2003-ம் ஆண்டு முதல் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
ஜெம் வீரமணி ஆனால், இந்த வழக்கு ஆரம்பத்தில் எதிர்பார்த்தபடி நகரவில்லை. கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டபோது, போதிய ஆதாரங்கள் இல்லை என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிகளை அடையாளம் காண முடியவில்லை என்றும் சொல்லி வழக்கை முடிக்க போலீசார் முயன்றதாக தகவல் வெளியானது.

ஆனால், சிறப்பு போக்சோ நீதிமன்றம் இதை ஏற்க மறுத்து மறுவிசாரணைக்கு உத்தரவிட்டது. இதன்பிறகு மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை கையில் எடுத்துத் தீவிரப்படுத்தினார்கள்.. அதன் தொடர்ச்சியாக 83 வயதான வீரமணி கைது செய்யப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்மன் மற்றும் வீரமணியின் முன்னாள் உதவியாளர் கணேசன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

 

வீரமணியின் ரகசிய டைரி விசாரணை அடுத்த கட்டத்துக்கு சென்றபோது வீரமணியின் ரகசிய டைரி என்று கூறப்படும் ஆவணம் போலீசாரின் கவனத்துக்கு வந்தது. அதில், வழக்கை கைவிடுவதற்காக சுமார் ரூ.70 கோடி வரை போலீசாருக்கு லஞ்சம் கைமாறியதாகவும், கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக தனது நிலத்தை விற்று போலீஸ் உயரதிகாரிகளுக்கு ரூ.60 கோடி கொடுத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாகவும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது…

அதேபோல, சாந்தியின் வீட்டில் ரகசியமாக பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் பென் டிரைவ்களில் சேமித்து வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

வீரமணியை மிரட்டி பணம் இந்த வீடியோக்களை வைத்து வீரமணியை மிரட்டி பணம் பறிக்க அரசியல் பிரமுகர்களை அணுகியதாகவும் தகவல் வெளியானது… அதாவது வீரமணியிடம் இருந்து ரூ.10 கோடி பெறப்பட்டதாகவும், அதில் ரூ.8 கோடியை சிலர் வைத்துக்கொண்டு சாந்திக்கு ரூ.2 கோடி மட்டுமே கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

பணம் முழுமையாக கிடைக்காததால் சாந்தி வீடியோ ஆதாரங்களை போலீசாரிடம் கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், சென்னை தி.நகரில் உள்ள வீரமணியின் வீடு உள்ளிட்ட 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி மேலும் டிஜிட்டல் ஆதாரங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. கடந்த காலத்தில் வழக்கை முடிக்க முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து உதவி ஆணையர் யாஸ்மின், ஆய்வாளர்கள் மகேஷ்குமார், ராஜலட்சுமி ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்போது விசாரணையில் இன்னொரு முக்கிய விஷயம் வெளியாகியுள்ளது. இதுவரை 10 சிறுமிகளிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த சிறுமிகள் இன்று மேஜராகிவிட்ட நிலையில், சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் இடங்களுக்கு நேரில் அழைத்துச் சென்று போலீசார் அவர்களிடம் வாக்குமூலம் பெற்று வருகின்றனர். இதில் ஒரு பெண், தான் மிரட்டப்பட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளாராம்.. எனினும்,.

பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள், வாக்குமூலங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. சென்னை தேனாம்பேட்டை பங்களா இப்படி வீரமணி விவகாரம் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இப்போது சிசிடிவி காட்சி, மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.. சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியபோது சாந்தியின் தேனாம்பேட்டை வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில்,

இந்த காட்சி பதிவானதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இதன் உண்மைத்தன்மை அறிய தொழில்நுட்ப ஆய்வுக்கு இந்த வீடியோ அனுப்பப்பட்டுள்ளது.. வீரமணி வழக்கில் அடுத்தடுத்து திடுக்கிடும் ஆதாரங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில்,தேனாம்பேட்டை பங்களாவில் நிர்வாண கோலத்தில் அவர் உல்லாசமாக இருந்த காட்சிகள் தற்போது வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.. அதுமட்டுமல்ல, இந்த சிசிடிவி வீடியோ, வீரமணிக்கு எதிரான வழக்கில் மிக முக்கியமான ஆதாரமாகவும் கருதப்படுகிறது..!!