
வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட நடிகை ரோஜா கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நகரி தொகுதியில் உள்ள விஜயபுரம் மண்டலம் இல்லத்தூர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.பி. டி.சி. வேட்பாளர் உதயகிரி தேவி 10 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சி கோரிக்கை வைத்தது.
பின்னர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளரை வெளியே தள்ளிவிட்டு, சிறிது நேரத்திற்கு பிறகு தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் ஜெயபிரதா 3 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா டிகிரி கல்லூரி முன் வேட்பாளர் மற்றும் தொண்டர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ரோஜாவை பொலிசார் சென்று கைது செய்துள்ளனர்.



