மிரட்டல்களால் ஈரானை முடக்க முடியாது ட்ரம்புக்கு சவால் விட்ட ஈரான் அதிபர்!

அமெரிக்காவும் இஸ்ரேலும் அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு தாக்கினாலும், நாங்கள் ஒருபோதும் பணியவில்லை. எந்த அச்சுறுத்தலுக்கும் ஈரானியர்கள் ஒருபோதும் தலைவணங்க மாட்டார்கள்;

யாருக்கும் மண்டியிடவும் மாட்டார்கள் என நியூயார்க்கில் நடைபெறும் ஐநா கூட்டத்தில் ஈரான் அதிபர் மசூத் திட்டவட்டமாக கூறினார். பொருளாதாரத் தடைகள், மிரட்டல்களால் ஈரானை முடக்க முடியாது. அமெரிக்காவின் இந்த அத்துமீறல்கள் ஈரான் மக்களின் எதிர்ப்பு உணர்வை மேலும் அதிகரிக்கவே செய்யும் என்பதை ட்ரம்ப் உணர வேண்டும் என அவர் தெரிவித்தார்.