ஓமனின் கிழக்குக் கடற்கரைக்கு அப்பால், ஆன்டிகுவா மற்றும் பார்படா நாட்டுக் கொடியுடன் சென்ற எம்.வி. கேப் டாவோ என்ற சரக்குக் கப்பல் மீது நேற்று நடந்த ஏவுகணைத் தாக்குதலில், உபியைச் சேர்ந்த சூரஜ் யாதவ் என்ற மாலுமி பலியானார். தாக்குதலில் தலையில் ஏற்பட்ட காயங்களால் சூரஜ் யாதவ் உயிரிழந்தார் என ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்தார்.Maritime Transport
அந்தக் கப்பலில் 20 இந்திய மாலுமிகள் இருந்தனர். உயிர் பிழைத்த மாலுமிகள் ஓமன் கடற்படையால் மீட்கப்பட்டு கரைக்குக் கொண்டுவரப்பட்டனர். உயிர் பிழைத்த இந்தியக் குழுவினரை உடனடியாகவும் பாதுகாப்பாகவும் தாயகம் திரும்ப அழைத்து வருவதற்காக, ஓமன் அதிகாரிகள் மற்றும் கப்பல் மேலாண்மை நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறு கடல் சார் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.



