பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மஸ்துங், துர்பத் மற்றும் குவாட்டா ஆகிய பகுதிகளில் ராணுவத்தினரும் போலீசாரும் நடத்திய அதிரடிச் சோதனைகளில் 16 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனிடையே, நுஷ்கி மாவட்டத்தில் வீடு வீடாகச் சென்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் சுகாதாரப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு அளித்த 2 காவலர்களை மர்ம நபர்கள் சுட்டுக்கொன்றனர்.நாட்காட்டியைத் தேர்ந்தெடுங்கள்



